உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேகா சிக்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேகா சிக்ரி
சுரேகா சிக்ரி ஒரு நிகழ்ச்சியில்
பிறப்பு1945 (அகவை 78–79)
புது தில்லி, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1978 முதல் தற்போது வரை
அறியப்படுவதுபதாய் ஹோ

சுரேகா சிக்ரி (Surekha Sikri) ஓர் இந்திய திரைப்பட , நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இந்தி நாட்க அரங்குகளின் ஒரு மூத்த நடிகையாவார், 1978 ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்பதில் அறிமுகமானார், மேலும் பல இந்தி மற்றும் மலையாள படங்களில், அதே போல் இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடிக்கிறார்.

சிக்ரி தமஸ் (1988) மற்றும் மம்மூ (1995) என்ற திரைப்படங்களில் அவரது பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுஅவருக்கு வழங்கப்பட்டது, 2008ஆம் ஆண்டில் பாலிகா வாது என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது விருதினைப் பெற்றுத் தந்தது துணைபாத்திர சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது 2011 ல். கூடுதலாக, இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989 இல் சங்கீத நாடக அகாதமி விருது வென்றார். அவரது சமீபத்திய வெளியீடு பத்ஹாய் ஹோ (2018), இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் அவருக்கு மகத்தான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது. மேலும் 64 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் அவர் தனது நடிப்பிற்காக 2019 ஸ்டார் ஸ்க்ரீன் விருதில் சிறந்த துணை நடிகைக்கான திரை விருதை வென்றார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

சிக்ரி உத்தரப்பிரதேசம் மற்றும் அல்மோரா மற்றும் நைனிடாலில் தனது குழந்தை பருவத்தை கழித்தார். அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகதில் பயின்றார். பின்னர் அவர் 1968 ஆம் ஆண்டில் தேசிய நாடக பாடசாலையில் (NSD) பட்டம் பெற்றார்.[1] அவரது தந்தை விமானப் படையில் இருந்தார், அவரது தாயார் ஒரு ஆசிரியர் ஆவார். அவர் மும்பையில் வசித்துவரும் கலைஞரான ஹேமந்த் ரெஜை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராகுல் சிக்ரி என்ற மகன் பிறந்தார்.[2][3] 2009 அக்டோபர் 20இல் இதய செயலிழப்பு காரணமாக அவளது கணவர் ஹேமந்த் ரெஜை இழந்தார்.[4] 1989 இல் சுரேகா சிக்ரி சங்கீத் நாடக அகாடமி விருது பெற்றார்.[5]

குறிப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேகா_சிக்ரி&oldid=4115253" இலிருந்து மீள்விக்கப்பட்டது