சுருள் கம்பளி நூல் ஆடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருள் கம்பளி நூல் ஆடை என்பது சோவியத் ஒன்றிய குடியரசில் உள்ள அஸ்ட்ரகான் என்னும் வோல்கா நதிக்கரை நகரத்தில் வளர்க்கப்படும் ஒரு வகை செம்மறி ஆட்டில் தோலிலிருந்து பெறப்படும் சுருள் கம்பளி நூலால் நெய்தோ பின்னியோ அல்லது இருமுறைகாளுமோ உருவாக்கப்படும் ஆடையாகும். அஸ்ட்ரகான் ஆட்டுத் தோலின் தோற்றத்தை பெறும்பொருட்டு இயற்கை இழைகளைக் கொண்டு நெருங்கிய சுருள்களால் மூடப்பட்ட முருடான துணி உருவாக்கப்படுகிறது.இத்துணியும் அசுட்டிரகான் எனக் குறிப்பிடப்படுகிறது.பருத்தியை அடிப்படை நூல்களாகவும் கம்பளி,அக்கிரிலிக் மோடாக்ரிலிக், மோகேர் நூல்களை அடுக்குகளாகவும் அமைத்து நெய்தல் பின்னுதல் இருவகை செயல் முறைகளிலும் இத் துணியை உருவாக்கலாம்.இது மென்மயிர்க் குஞ்சத்துணியை ஒத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மே.ரா.பாலசுப்ரமணியன். -அறிவியல் களஞ்சியம் -தொகுதி பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_கம்பளி_நூல்_ஆடை&oldid=3739186" இலிருந்து மீள்விக்கப்பட்டது