சுருபலிஜோரா
சுருபலிஜோரா (Surubalijora) அல்லது சுருபலிஜோர் என்பது இந்தியாவின் ஒடிசா சுபர்ணபூர் மாவட்டத்தின் பிர்மகாராஜ்பூர் துணைப்பிரிவின் சுபாலயா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆறு (ஜோரா அல்லது ஜோரெ) ஆகும்.[1][2][3][4] இது ஒரு மலையிலிருந்து உருவாகி சுபாலயா, தேபபாதர், அம்பசாரபட்டா அருகே மகாநதி நதியுடன் இணைகிறது. இதன் சந்திப்பு இடத்தில் ஒரு சிறிய வடிநிலத்தினை உருவாக்குகிறது. இந்த வடிநிலம் அருகே, நிலம் வளமானதாக உள்ளது. இங்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு காய்கறிகளைப் பயிரிடுகின்றனர்.
ஒடிசா பாலம், கட்டுமானக் கழகம் சுபாலயா, காமிரா கிராமத்திற்கு அருகே சுருபலிஜோர் மீது ஒரு பாலத்தைக் கட்டியுள்ளது. ரைராக்கோல், பௌத், சுபாலயா, பீர்மஹாராஜ்பூர், தர்மசாலா, சோனேபூர், சம்பல்பூர் போன்ற பல்வேறு நகரங்களை இணைப்பதில் இந்த பாலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "River Basins of Orissa". dowrorissa.gov.in. Retrieved 18 January 2015.
- 1 2 Unknown [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Unknown [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Detailed Demand Plan (Budget 2004-2005)" (PDF). Archived from the original (PDF) on 2015-01-18.