சுருதி சின்கா
சுருதி சின்கா | |
|---|---|
2024-இல் சின்கா | |
| பிறப்பு | ஏப்ரல் 3, 1998 தில்லி, இந்தியா |
| பணி | தொலைக்காட்சி ஆளுமை, நடிகை, நடனக் கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 2015–முதல் |
| அறியப்படுவது | எம்டிவி ரோடீஸ்
எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா 11 ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் 2 கேம்பஸ் பீட்ஸ் |
சுருதி சின்கா (Shruti Sinha) என்பவர் ஓர் இந்திய நடிகையும் தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார். இவர் எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா 11 என்ற உண்மைநிலை நிகழ்ச்சியை வென்றதன் மூலமும், ரோடீஸ் எக்ஸ்ட்ரீம் மற்றும் ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் 2 ஆகிய உண்மைநிலை நிகழ்ச்சிகளில் இறுதிப் போட்டியாளராகப் பங்கேற்றதன் மூலமும் பரவலாக அறியப்படுகிறார்.
வாழ்க்கைத்தொழில்
[தொகு]சின்கா 2015ஆம் ஆண்டில் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] அங்கு இவர் சிறந்த 15 போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வானார். பின்னர், எம்டிவி இந்தியாவின் லவ் ஆன் தி ரன் நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில் நடித்தார்.
2018 இல் எம்டிவி ரோடீஸ் எக்ஸ்ட்ரீம் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சின்கா புகழ்பெற்றார்.[2] இதில் இவர் அரையிறுதிப் போட்டியாளராக வெளியேறினார். 2019 ஆம் ஆண்டில், இவர் எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 11 இல் பங்கேற்று, கௌரவ் அலகினுடன் இணைந்து வெற்றியாளரானார்.[3][4] இதே ஆண்டில், இவர் எம்டிவியின் ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிப் போட்டியாளராக உருவெடுத்தார்.[5][6]
2021ஆம் ஆண்டில், யோ யோ ஹனி சிங் மற்றும் ஹோமி டெல்லிவாலா பாடிய மும்பை சாகா திரைப்படத்தின் "ஷோர் மச்சேகா" பாடலில் சின்கா தோன்றினார்.
2023ஆம் ஆண்டில், இவர் அமேசான் மினிடிவியின் கேம்பஸ் பீட்ஸ் என்ற தொடரில் சந்தனு மகேஸ்வரிக்கு ஜோடியாக நடித்தார்.
திரைப்படவியல்
[தொகு]தொலைக்காட்சி
[தொகு]| ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | குறிப்பு | Ref. |
|---|---|---|---|---|
| 2015 | டான்ஸ் இந்தியா டான்ஸ் 5 | போட்டியாளர் | ||
| 2016 | எம்டிவி லவ் ஆன் தி ரன் | விருந்தினர் | ||
| 2017 | எம்டிவி ரோடீஸ் 16 | போட்டியாளர் | 5ஆவது இடம் | |
| 2018 | எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா 11 | வெற்றியாளர் | [7] | |
| 2019 | எம்டிவி ரோடீஸ் 17 | விருந்தினர் | ||
| ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் 2 | போட்டியாளர் | 3ஆவது இடம் | ||
| 2023–2025 | கேம்பஸ் பீட்ஸ் | நேத்ரா | [8] |
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் | உசாத்துணை |
|---|---|---|---|---|
| 2021 | மும்பை சாகா | N/A | "ஷோர் மச்சேகா" பாடலில் சிறப்புத் தோற்றம் | [9] |
இசை காணொளிகள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாடகர் | உசாத்துணை |
|---|---|---|---|
| 2021 | "வீகெண்ட் வைப்" | ஜுபெல், தேசி க்ரூ | |
| 2025 | "லால் பெராரி" | அம்ருதா பட்நாவிஸ் | [10][11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mudasar Ki Mandali: Shruti Sinha". Times of India. August 6, 2015. https://timesofindia.indiatimes.com/dance-india-dance-season-5/Mudasar-Ki-Mandali-Shruti-Sinha/articleshow/48375029.cms.
- ↑ Farzeen, Sana (July 29, 2018). "Roadies Xtreme: A shocking double eviction before the semi-final". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/television/roadies-xtreme-double-eviction-5279311/.
- ↑ Farzeen, Sana (February 3, 2019). "Shruti Sinha and Gaurav Alugh win Splitsvilla 11". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/television/shruti-sinha-and-gaurav-alugh-win-splitsvilla-11-5567124/.
- ↑ "Splitsvilla 11 winner: Shruti Sinha and Gaurav Alugh bag the trophy along with the cash prize". Times Of India (in ஆங்கிலம்). 4 February 2019.
- ↑ Chakravorty, Reshmi (November 5, 2019). "Space ace". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/051119/space-ace.html.
- ↑ Farzeen, Sana (November 4, 2019). "Ace of Space 2 winner Salman Zaidi: Baseer will always be dear". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/television/mtv-ace-of-space-2-winner-salman-zaidi-i-was-the-underdog-of-the-season-6102084/.
- ↑ "Congratulations! Gaurav Alugh and Shruti Sinha win MTV Splitsvilla XI". India Today (in ஆங்கிலம்). 2019-01-14. Retrieved 2023-09-23.
- ↑ "Shantanu Maheshwari starrer teen drama 'Campus Beats' to release". News18 (in ஆங்கிலம்). 2023-09-15. Retrieved 2023-09-23.
- ↑ "'शोर मचेगा' गाने में हनी सिंह से ज्यादा इस लड़की की हो रही है चर्चा, जानिए कौन है श्रुति सिन्हा". Navbharat Times (in இந்தி). Retrieved 2023-09-23.
- ↑ T-Series (2025-03-23). Laal Ferrari (Video): Amruta Fadnavis | Feat. Sanam Johar & Shruti Sinha. Retrieved 2025-04-02 – via YouTube.
- ↑ "अमृता फडणवीसांच्या आवाजातील नवं कोरं गाणं प्रदर्शित, "लाल फेरारी"ची सोशल मीडियावर चर्चा". Lokmat (in மராத்தி). 2025-03-24. Retrieved 2025-04-02.