சுரிதகம் (யாப்பிலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுரிதகம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப்பாவகையில் தரவு, தாழிசை, அராகம் அம்போதரங்கம், தனிச்சொல் என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து ஆறாவதாக மற்றும் இறுதியாக உறுப்பாக வரும். கலிப்பா தவிர்த்து வெண்பா மற்றும் ஆசிரியப்பாவின் உறுப்பாகவும் வரும். அப்படி வரும் போது முறையே வெள்ளைச் சுரிதகம் மற்றும் ஆசிரியச் சுரிதகம் எனப்படும்.

சுரிதகம் என்றால் ”சுருங்கி முடிவது” என்று பொருள். ஈற்றில் (இறுதியில்) வைக்கப்படுவது எனும் பொருளில் வைப்பு எனவும் இறுதி வரம்பாக வருவது என்பதனால் வாரம் என்றும் இதற்கு பிற பெயர்கள் பெறும்.

எடுத்துக்காட்டு[தொகு]

வாட்போக்கி கலம்பகத்தில் வரும் பின்வரும் வரிகள் சுரிதகதுக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன

பசித்தழூஉ ஞானப் பாலுண் மழவு
மேற்றொடு சூல மேற்றதோ ளரசு
மவிர்தரு செம்பொ னாற்றிடை யிட்டுக்
குளத்தி லெடுத்துக் கொண்ட கோவுங்
கனவிலு மமரர் காணரு நின்னைப்
பரிமா மிசைவரப் பண்ணிய முதலுங்
கரைதரு தமிழ்க்குக் காணி கொடுத்த
நின்றிருச் செவிக்க ணெறிகுறித் தறியாப்
பொல்லாப் புலைத்தொழிற் கல்லாச் சிறியே
னெவ்வகைப் பற்று மிரித்தவர்க் கன்றி
மற்றையர்க் கொல்லா வயங்கருள் பெறுவான்
கொடுவிட மமுதாக் கொண்டதை யுணர்ந்து
குற்றமுங் குணமாக் கொள்வையென் றெண்ணிப்
புன்மொழித் துதிசில புகட்டின
னன்மொழி யெனினு மருளுதி விரைந்தே.
(இதுபதினைந்தடி நேரிசையாசிரியச்சுரிதகம்.)

மேற்கோள்கள்[தொகு]