சுராயா தலீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுராயா தலீல்
ثریا دلیل
Suraya Dalil - 2017 (23660803992) (cropped).jpg
2017இல் சுராயா தலீல்
தேசியம் ஆப்கானித்தான்
குடியுரிமைஆப்கானித்தான்
பணிமருத்துவர்

சுராயா தலீல் (Suraya Dalil) , (பிறப்பு: 1970) இவர் ஒரு ஆப்கானிய மருத்துவரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2010 முதல் 2014 வரை பொது சுகாதார அமைச்சராக பணியாற்றினார். மேலும் 2015 நவம்பர் முதல் ஐக்கிய நாடுகள் சபையில் தனது நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தலீல், 1970 பிப்ரவரியில் காபூலில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியராக இருந்தார். அந்த நேரத்தில் ஆப்கானித்தானில் கல்வி அசாதாரணமாக இருந்தபோதிலும் இவரது தந்தை இவரது கல்வியை ஊக்குவித்தார். இவர் சர்கோனா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர்,1991இல் காபூல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [1] [2] உள்நாட்டுப் போரின்போது இவரது தந்தை காயமடைந்த பின்னர் இவரது குடும்பத்தினர் மசார்-இ-ஷெரீப்பிற்கு குடிபெயர்ந்தனர். [3] [4]

2004ஆம் ஆண்டில், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளியில் [5] சேர்ந்து கொள்ள தலீலுக்கு அதிபரின் உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர், 2005இல் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1] [2] [4]

தொழில்[தொகு]

1992 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் வடக்கு ஆப்கானித்தானில் உள்ள தஜிக் அகதிகளுக்கு சுகாதார சேவையை வழங்கும் எல்லைகளற்ற மருத்துவராக தலீல் பணியாற்றினார். [1] பின்னர் இவர் பாக்கித்தான் மற்றும் ஈரானில் இருந்து திரும்பிய ஆப்கானிய அகதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்புடன் பணியாற்றினார். [2] [3]

1994ஆம் ஆண்டில் ஆப்கானித்தானில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [1] ஒரு பெரிய அளவிலான தட்டம்மை மற்றும் போலியோ நோய்த்தடுப்பு திட்டத்தை மேற்பார்வையிட்டார். [4] 1998இல் தாலிபான்கள் மசார்-இ-ஷெரீப்பை அடைந்தபோது, இவர் தனது குடும்பத்தினருடன் பாக்கித்தானுக்கு கால்நடையாக தப்பி ஓடினார். அங்கு இவர் ஆப்கானித்தான் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் அலுவலகத்தில் மீண்டும் வேலைக்குச் சென்றார். [2] தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர் தனது குடும்பத்துடன் 2002இல் காபூலுக்கு திரும்பினார். சோமாலியாவில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தனது சுகாதார மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் முதல்வரை நியமிக்கும் வரை 2007 வரை இவர் அங்கு பணியாற்றினார். அங்கு இவர் 2009 திசம்பர் வரை பணியாற்றினார்.

2010 சனவரியில், அதிபர் ஹமித் கர்சாய் தலிலை பொது சுகாதார அமைச்சராக நியமித்தார். 2012 மார்ச்சில் அமைச்சராக நியமிக்கப்பட்ட [1] [6] இவர் குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதங்களைக் குறைக்க பல்வேறு உத்திகளை இவர் தொடங்கினார். [7] [8]

2015 நவம்பரில், அதிபர் அஷ்ரப் கனி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆப்கானித்தான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர பிரதிநிதியாக தலீலை நியமித்தார். [6] [9] இந்த பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியானர். [3]

2017ஆம் ஆண்டின் இறுதியில், மனிதர்களுக்கெதிரான கன்னிவெடிகளின் பயன்பாடு, உற்பத்தி, இடமாற்றம் மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடைசெய்யும் மாநாட்டின் ( ஒட்டாவா ஒப்பந்தம் ) தலைவராக [10] தலீல் நியமிக்கப்பட்டார். இந்த ஆயுதங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆப்கானித்தான் ஒன்றாகும். [11] [12] மாநாட்டின் தலைவர் பதவி 2018 இன் இறுதியில் முடிவடைந்தது. [13]

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

  • சர்வதேச பாலின சாம்பியன்ஸ் (ஐ.ஜி.சி), உறுப்பினராகவும் இருக்கிறார். [14]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

நாடு தழுவிய தடுப்பூசியைச் செயல்படுத்துவதில் இவர் செய்த சாதனைகளுக்காக, தடுப்பூசி உலக ஒன்றியத்தால் 2012ஆம் ஆண்டில் தலீலுக்கு பரிசு வழங்கப்பட்டது. [15] இனப்பெருக்கம், தாய்வழி மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான ஆப்கானித்தானின் முயற்சிகளை அங்கீகரித்து, இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான உலகளாவிய தலைவர்கள் அமைப்பின் 2014ஆம் ஆண்டில் ஒரு தீர்வு விருது சிறப்பு குறிப்பை இவர் ஏற்றுக்கொண்டார். [16]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

உஸ்பெகி தலீலுடைய தாய்மொழியாகும். அத்துடன் தாரி, பஷ்தூ, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றையும் இவர் பேசுகிறார். [1] இவரது கணவரும் ஒரு மருத்துவராவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [6] [3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராயா_தலீல்&oldid=2936284" இருந்து மீள்விக்கப்பட்டது