சுரான்கோட்
சுரான்கோட்
சுவரன்கோட் | |
---|---|
ஆள்கூறுகள்: 33°02′N 74°29′E / 33.04°N 74.49°E | |
Country | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பூஞ்ச் |
அரசு | |
• சட்டப் பேரவை உறுப்பினர் | அக்ரம் சவுத்ரி முகமது.[1] (இந்திய தேசிய காங்கிரசு) |
ஏற்றம் | 1,580 m (5,180 ft) |
மொழிகள் | |
• அலுவல் | உருது |
• பிற | பகாரி, கோசிரி, காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 185121 |
சுரான்கோட் (Surankote) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும், வட்டமுமாகும். [2] இது பிர் பாஞ்சல் மலைத்தொடருக்கும் இமயமலைக்குமிடையில்]] அமைந்துள்ள சுரான்கோட் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்துள்ளது. [3] இது குளிர்காலத்தில் அதிகப் பனிப்பொழிவைப் பெறுகிறது.
நிலவியல்
[தொகு]சுரான்கோட் நகரம் பூஞ்ச் நகரின் தென்கிழக்கில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவிலும், குளிர்காலத் தலைநகர் சம்முவிலிருந்து 221 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கு 33 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. பள்ளத்தாக்கின் மொத்த மக்கள் தொகை 124,755 என்ற அளவில் இருக்கின்றனர். இதில் பகாரிகள், குஜ்ஜர், பேக்கர்வால்கள் ஆகியோர் அடங்குவர். உள்ளூர் பகாரிகள் காஷ்மீரி பேசும் சிறுபான்மையினராக உள்ளனர்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுரான்கோட்டின் மக்கள் தொகை 8,892 ஆகும். இதில் 53% ஆண்களும், 47% பெண்களும் உள்ளனர். சராசரி கல்வியறிவு 73% ஆகும். [4]
இசுலாத்தை தொடர்பவர்கள் 86% பேர் உள்ளனர். பகாரிகள் ஒரு விவசாய பழங்குடியினராகவும் மிகப்பெரிய சமூகமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இடங்கள்
[தொகு]நூரி சேம்ப்
[தொகு]முகலாய ராணி நூர் சகான் பெயருடன் தொடர்புடைய நூரி சேம்ப் அதன் அருவிக்கு பெயர் பெற்றது. இது பூஞ்ச் நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேரரசர் ஜஹாங்கிர் இந்த அருவி மேல் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். இதற்கு தனது அன்பான இராணி நூர் சகானின் பெயரிட்டார் முகலாய இராணி ஓய்வெடுப்பதற்காக இங்கு தங்கியிருந்தார். மலைச் சுவரிலிருந்து பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியை ஏற்படுத்தி குளித்தபின் இராணி அதில் அலங்காரம் செய்தாள். [5] பல உள்ளூர்வாசிகள் நூரி சேம்பை ஒரு பால் அருவி என்று அழைக்கிறார்கள். [6]
பியார் கி கலி
[தொகு]பீர் கி கலி என்பது முகலாயச் சாலையில் போஷானா மற்றும் ஹீர் புர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு புனித இடமாகும். இது முகலாயச் சாலையின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. 'பீர்' என்ற வார்த்தையின் அர்த்தம் முஸ்லிம் நம்பிக்கையின் படி மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நபர் என்று பொருளாகும். பியர் கி கலி என்ற பெயருக்கு சில நல்ல பொருத்தங்கள் உள்ளன. இந்த இடத்தின் வரலாறு ஆலம்தார்-இ-காஷ்மீர், ஷேக் நூர்-உ-தின் நூரானி (ஆர்.ஏ) (1378 முதல் 1441 வரை) என்ற புனித மற்றும் மத ரீதியாக உயர்ந்த நபரின் காலத்திற்கு முந்தையது. [7]