உள்ளடக்கத்துக்குச் செல்

சுராசந்த்பூர்

ஆள்கூறுகள்: 24°20′N 93°40′E / 24.333°N 93.667°E / 24.333; 93.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுராசந்த்பூர் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்சுராசந்த்பூர்
பெயர்ச்சூட்டுமணிப்பூர் மன்னர் சுராசந்த் சிங்
மொழிகள்
 • அலுவல் மொழிமணிப்புரியம்[1]
 • வட்டார மொழிகுகி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
795128[2]
தொலைபேசி குறியீடு03874[3]
வாகனப் பதிவுMN 02

சுராசந்த்பூர் (Churachandpur), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் தெற்கில் அமைந்த சுராசந்த்பூர் மாவட்டம் மற்றும் சராசந்த்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மணிப்பூர் மன்னர் சுராசந்த் சிங் நினைவாக இந்நகரத்திற்கு இந்நகரத்திற்கு சுராசந்த்பூர் எனப்பெயரிடப்பட்டது.[4][5]

இந்நகரத்தில் 5 ஏப்ரல் 2023 அன்று மெய்தெய் மக்கள் மற்றும் குகி மக்கள் இடையே மோதல்களை கட்டுப்படுத்த காவல்துறையில் சுடப்பட்டு 4 பேர் இறந்தனர்.[6]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுராசந்த்பூர் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 1,74,138 ஆகும். அதில் ஆண்கள் 87,542 மற்றும் பெண்கள் 86,596 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.24% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.67% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் முறையே 0.23% மற்றும் 91.33% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் கிறித்தவர்கள் 91.43%, இந்துக்கள் 5.79%, இசுலாமியர் 0.84%, பிறர் 1.76% ஆகவுள்ளனர்.[7] இங்குள்ள மக்களில் மணிப்புரியம் மற்றும் குக்கி பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, இந்திய அரசு. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  2. India Post. "Pincode search - Churachandpur" (in ஆங்கிலம்). Archived from the original on 16 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
  3. Bharat Sanchar Nigam Ltd. "STD Codes for cities in Manipur" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Vualzong, Ginza. "The Story Behind Songpi, Churachandpur and Lamka". www.zogam.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  5. Falling Rain Genomics, Inc. "Churachandpur, India Page" (in ஆங்கிலம்). Archived from the original on 18 January 2008. பார்க்கப்பட்ட நாள் 11 July 2008.
  6. Manipur violence flares again: 4 shot dead in Churachandpur
  7. Churachandpur Taluk Population - Churachandpur, Manipur


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராசந்த்பூர்&oldid=3747588" இலிருந்து மீள்விக்கப்பட்டது