சுரப்பித்தோல் புதர் தவளை
| சுரப்பித்தோல் புதர் தவளை | |
|---|---|
| சுரப்பித்தோல் புதர் தவளை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| வேறு பெயர்கள் [2] | |
| |
சுரப்பித்தோல் புதர் தவளை (Raorchestes glandulosus, glandular bush frog, rough-skinned bush frog, southern bubble-nest frog) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.[2][3]
வளரியல்பு
[தொகு]மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இராவோர்செசுடெசு இனங்களுக்கிடையே, இவ்வினத்தின் தனித்துவமான பண்பு அதன் முன்னங்கையின் மேற்புறம், இலோரியல் (loreal) பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறமாகும். இவை சிறிய வகைத் தவளைகளாகும். இவற்றின் ஆண் தவளைகளின் உடல் நீளம் (மூக்கு முதல் குதம் வரை) 22 முதல் 27 மி.மீ வரை இருக்கும். பொதுவாகச் சிறிய அளவிலான, புதர் தவளை இனங்களுடன் ஒப்பிடுகையில், இவை நடுத்தர அளவு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. தற்போது காணாமல் போன இதன் மாதிரி உயிரி சுமார் 31 மி.மீ நீளம் கொண்டிருந்தது. இவற்றின் மூக்குப் பகுதி கூர்மையாக இருக்கும். உடலின் மேற்புறம் சொரசொரப்பான (shagreened) தன்மையுடன் காணப்படும். வயிற்றுப் பகுதியின் பக்கவாட்டில் சுரப்பிகள் தெளிவாகக் காணப்படுகின்றன (இதனாலேயே 'glandulosus' என்ற பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது). உடலின் மேற்புற நிறம், தனிப்பட்ட தவளைகள் மற்றும் சூழல் நிலையைப் பொறுத்து, அடர் பச்சை முதல் அடர் ஊதா அல்லது கத்திரிப்பூ நிறம் வரை மாறுபடும். உடலின் பக்கவாட்டுப் பகுதிகள், முன்னங்கைகள், லோரியல், செவிப்பறை பகுதிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.[3]
வாழிடமும், அதன் அச்சுறுத்தல்களும்
[தொகு]இந்த இனம், கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 2000 மீட்டர் வரையிலான உயரத்தில் காணப்பட்டுள்ளது. [2][4]இது மரங்களில் வாழும் இயல்புடைய சிற்றினமாகும்; பொதுவாக இது தரையிலிருந்து, 4 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் காணப்படுகிறது. இது மழைக்காடுகளில் மட்டுமல்லாமல், காபித் தோட்டங்கள், தோட்டங்களுக்கு அருகிலுள்ள காட்டு விளிம்புகள் போன்ற மனித நடவடிக்கைகளால் மாற்றமடைந்த வாழிடங்களிலும் காணப்படுகிறது.[3] இந்த் தவளை இனம் வாழிட இழப்பால், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தவளையின் பரவல் எல்லைக்குள் இராஜீவ் காந்தி தேசியப் பூங்கா, அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகிய பாதுகாக்கப்பட்ட பூங்காக்களும் அடங்கி உள்ளன.[1] தோட்டங்கள், சாலைகள் அமைப்பதால் ஏற்படும் வாழ்விட இழப்பின் காரணமாக, இந்தத் தவளை இன அழிவின் விளிம்பில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றமும், இந்தத் தவளைக்கு அச்சுறுத்தல் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர், ஏனெனில் அது காடுகளை மிகவும் வறண்டு போகச் செய்து, தவளை செழித்து வாழ முடியாத நிலையை ஏற்படுத்தக்கூடும். பல தவளைகள் உயரமான மலைப்பகுதிகளில் வாழ்வதால், காலநிலை வெப்பமடைந்தால், அவற்றால் இயற்கையாகப் புதிய இடங்களுக்கு இடம்பெயர முடியாது. புதர் தவளைப் பேரினத்தைச் சேர்ந்த மற்ற தவளைகள் கைட்ரிடியோமைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால், அது இந்த இனத்தையும் கொல்கிறதா என்பது விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 IUCN Amphibian Specialist group (2023). "Southern Bubble-nest Frog: Raorchestes glandulosus". The IUCN Red List of Threatened Species. 3.1. p. e.T58847A166106955. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T58847A166106955.en. 58847. Retrieved March 10, 2024.
- 1 2 3 Frost, Darrel R. (2019). "Raorchestes glandulosus (Jerdon, 1853)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 29 November 2019.
- 1 2 3 Biju, S. D.; Bossuyt, Franky (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x.
- ↑ "Raorchestes glandulosus (Jerdon, 1853)". AmphibiaWeb. University of California, Berkeley. Retrieved July 31, 2023.
வெளியிணைப்புகள்
[தொகு]
விக்கியினங்களில் Raorchestes glandulosus பற்றிய தரவுகள்