சுரபி சிங்
சுரபி சிங் | |
|---|---|
| உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் 2022–பதவியில் | |
| முன்னையவர் | அமர் சிங் காதிக் |
| தொகுதி | கைம்கஞ்ச் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1985 (அகவை 39–40) |
| அரசியல் கட்சி | அப்னா தளம் (சோனேலால்) |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| முன்னாள் மாணவர் | |
| பணி | பல் மருத்துவர் |
சுரபி சிங் (Surabhi Singh-பிறப்பு 1985) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட கைம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி கூட்டாளியான அப்னா தளம் (சோனீலால் கட்சி) கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் 2022 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சிங் கைம்கஞ்சைச் சேர்ந்தவர். 2010-ஆம் ஆண்டில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2020ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பினை முடித்தார். இவர் மருத்துவர் அஜித் சிங்கை மணந்தார்.[3]
அரசியல்
[தொகு]சிங் 2022 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் கைம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அப்னா தளம் (சோனேலால் கட்சி) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். இவர் 114952 வாக்குகளைப் பெற்று சமாஜ்வாதி கட்சி சர்வேஷ் அம்பேத்கரை 18,543 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] முன்னதாக, இவர் 2017 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் இதே தொகுதியில் தோல்வியடைந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP retains all seats of Farrukhabad". https://timesofindia.indiatimes.com/city/kanpur/bjp-retains-all-seats-of-farrukhabad/articleshow/90137471.cms.
- ↑ "Dr. Surabhi in Uttar Pradesh Assembly Elections 2022". News18 (in ஆங்கிலம்). Retrieved 2024-06-18.
- ↑ "Dr Surabhi (winner)". www.myneta.info. Retrieved 2024-06-18.
- ↑ "Kaimganj Election Result 2022 LIVE Updates: Dr. Surabhi of ADS Wins". News18 (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2024-06-18.
- ↑ "Kaimganj, Uttar Pradesh Assembly Election Results 2022 LIVE Updates: ADAL's Dr. Surabhi defeats SP's Sarvesh Ambedkar with 13883 votes". India Today (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2024-06-18.