சுரதா புதுவை தமிழ் எழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரதா புதுவை தமிழ் எழுதி
Suratha.JPG
தமிழ் எழுதி
உருவாக்குனர் சுரதா யாழ்வாணன்
பிந்தைய பதிப்பு 27.12.02 / 27.12.02
இயக்குதளம் விண்டோஸ் 2000, எக்ஸ் பி் (XP), 2003, ஃபயர் ஃபாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவிகளில்.

க்னூ/லினக்ஸ் - பெரும்பாலான எல்லா வழங்கல்களிலும். கான்கரர், மொசிில்லா, ஃபயர் ஃபாக்ஸ் உலாவிகளில்

வகை தமிழ் தட்டச்சு செயலி
அனுமதி திறந்த, இலவச செயலி
இணையத்தளம் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிக்கோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல் எனப்படும் தமிங்கில முறை, பாமினி, அமுதம், Tam ஆகிய தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். இச்செயலியைக் கணினியில் நிறுவத் தேவை இல்லை என்பதால், இச்செயலியைப் பயன்படுத்த கணினிப் பயனருக்கு கணினியில் சிறப்பு அனுமதிகள் தேவை இல்லை.

இச்செயலி உலாவியின் உதவியுடன் குறிப்பிட்ட இணையப் பக்கத்தில் மட்டுமே இயங்கும். எனவே, பிற இணையப் பக்கங்கள், ஆவணங்களில் நேரடியாக இதைக் கொண்டு எழுத முடியாது. முதலில் சுரதா எழுதியில் எழுதி பிறகு அதை வெட்டி எடுத்து பிற பக்கங்களில் ஒட்ட வேண்டும்.

எனினும், இணையத்தில் தமிழில் எழுத முனையும் பலரும் அறிந்ததாகவும் அவர்களின் முயற்சிக்குத் தொடக்கக் கருவியாகவும் இவ்வெழுதி விளங்குகிறது.