சுரண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுரண்டல் (exploitation) என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளது. இங்கே சிக்கல் மிக்க உபரி மதிப்பைச் சுரண்டுவது என்ற அரசியல் பொருளாதாரத் தத்துவக் கலைச் சொல்லாகக் கையாளப்படுகிறது.இதை காரல் மார்க்சு தனது மூலதனம் (Das Kapital) என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். சுரண்டல் என்பதற்கு உழைக்காமல் ஒருவர் பணம் பெற முனைந்தாலோ, காய்கறி விற்பவர் எடையில் மோசடி செய்தலோ இதைச் சுரண்டல் என்று எளிதில் கூறுகிறோம். மதிப்பு என்பதும், உபரி மதிப்பு என்பதும் ஒரு சரக்கின் விலைக்குள் இருக்கிற அம்சங்களாகும். சரக்கின் விலையை நிர்ணயிக்கிற சந்தைக் காரணங்கள் வேறு. அச்சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிற அவசியமான உழைப்பு நேரம் என்பது வேறு. ஒரு சரக்கை உற்பத்தி செய்ய ஆகும் அவசியமான சமூக உழைப்பு நேரம் என்பது தொழில்நுட்ப சமூகச் சூழலால் நிர்ணயிக்கப்படுவதாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரண்டல்&oldid=2830341" இருந்து மீள்விக்கப்பட்டது