சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு
Confederation of Independent Football Associations
உருவாக்கம்2013
வகைகழகங்களின் கூட்டமைப்பு
தலைமையகம்லுலெயா, சுவீடன்
உறுப்பினர்கள்
19[1]
உலகத் தலைவர்
பேர்-ஆன்டர்சு பிளைன்ட்
வலைத்தளம்http://www.conifa.org

கொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு (CONfederation of Independent Football Associations) என்பது 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கால்பந்துக் கழகங்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். ஃபீஃபா என்ற பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றோர், மற்றும் சிறு பிராந்தியங்கள் ஆகியவற்றின் தேசிய கால்பந்து அணிகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. இவ்வமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது கொனிஃபா உலகக் கிண்ணப் போட்டி 2014 ஆம் ஆண்டு சூன் 1 முதல் சூன் 8 வரை சுவீடனின் ஓஸ்டர்சுன்ட் நகரில் நடைபெற்றது.

உறுப்பினர்கள்[தொகு]

ஐரோப்பா

ஆப்பிரிக்கா

ஆசியா

வடக்கு மற்றும் நடு அமெரிக்கா

சில மாதங்கள் கொனிஃபாவில் உறுப்பினராக இருந்த கியூபெக் கால்பந்து அணி பின்னர் விலகிக் கொண்டது. இவ்வணி கியூபெக் கால்பந்துக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. இக்கூட்டமைப்பு வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் இணைய காலப்போக்கில் கோரும் என எதிர்பார்க்கப்பட்டதால், கியூபெக் கால்பந்து அணி கொன்காகாஃப் அல்லது ஃபீஃபாவில் உறுப்புரிமையுள்ள அணிகளுடன் மட்டுமே பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் என முடிவு செய்தது. [2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]