உள்ளடக்கத்துக்குச் செல்

சுயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுயஸ்
السويس
நகரம்
சுயஸ்-இன் கொடி
கொடி
சுயஸ் கால்வாயின் செயற்கை கோள் படம்
சுயஸ் கால்வாயின் செயற்கை கோள் படம்
சுயஸ் is located in Egypt
சுயஸ்
சுயஸ்
எகிப்தில் சுயஸ் நகரத்தின் அமைவிடம்
சுயஸ் is located in Lower Egypt
சுயஸ்
சுயஸ்
சுயஸ் (Lower Egypt)
சுயஸ் is located in ஆப்பிரிக்கா
சுயஸ்
சுயஸ்
சுயஸ் (ஆப்பிரிக்கா)
ஆள்கூறுகள்: 29°58′N 32°33′E / 29.967°N 32.550°E / 29.967; 32.550
நாடுஎகிப்து
ஆளுநரகம்சுயஸ் ஆளுநகரம்
நிறுவிய ஆண்டு1859
அரசு
 • ஆளுநர்அப்துல் மஜித்
பரப்பளவு
 • மொத்தம்9,002 km2 (3,476 sq mi)
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை
 (2021)[1]
 • மொத்தம்8,01,894
 • அடர்த்தி89/km2 (230/sq mi)
GDP
 • மொத்தம்எகிப்திய பவுண்டு 119 பில்லியன்
(அமெரிக்க டாலர் 7.6 பில்லியன்)
நேர வலயம்ஒசநே+3 (எகிப்திய சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3
இணையதளம்Suez.gov.eg

சுயஸ் (Suez) எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாயின் தென்கோடியில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும்.சுயல் கால்வாயின் வடகோடியில் சயீது துறைமுக நகரம் உள்ளது. மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் சுயஸ் கால்வாய் நிறுவப்பட்ட போது1859ஆம் ஆண்டில் இந்நகரம் நிறுவப்பட்டது. இந்நகரம் சுயஸ் ஆளுநரகத்தின் தலைநகராக உள்ளது. 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 9,002 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சுயஸ் நகரத்தின் மக்கள் தொகை 8,01,894 ஆகும். சுயஸ் நகரம், எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு கிழக்கே 138 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரததில் சுயஸ் கால்வாய் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளது[3]. மேலும் சுயஸ் துறைமுகம் சுற்றுலா தளமாக செயல்படுகிறது.

எகிப்தின் முக்கிய நகரங்களிலிருந்து சுயஸ் நகரத்திற்கு பயணியர் தொடருந்து சேவைகள் மற்றும் சரக்கு தொடருந்து சேவைகள் உள்ளது. சுயஸ் நகரத்தில் பெட்ரோ-கெமிக்கல்ஸ் ஆலைகளும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளது. மேலும் சுயஸ் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் ஆகும்.

நிர்வாகம்

[தொகு]

சுயஸ் நகரம் நிர்வாக வசதிக்காக 5 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து. அவைகள் பின்வருமாறு:

  1. சுயஸ் மாவட்டம்
  2. எல் அர்பீன் மாவடடம்
  3. எல் கனாயென் மாவட்டம்
  4. பைசல் மாவட்டம்
  5. அட்டாகா மாவட்டம்

பொருளாதாரம்

[தொகு]

சுயஸ் கால்வாயை 1859ஆம் ஆண்டில் பிரான்சு]] நாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்டது. மேலும் இக்கால்வாயை கட்டுவதற்கு பிரித்தானிய அரசும் நிதியுதவி வழங்கியது.

1952 எகிப்தியப் புரட்சியை அடுத்து, எகிப்தின் அதிபர் ஜமால் அப்துல் நாசிர் சுயஸ் கால்வாய் நிறுவனத்தை எகிப்தின் நாட்டுடமை ஆக்கினார். இதனால் 1956ஆம் ஆண்டில் பிரிட்டன், பிரான்சு மற்றும் இஸ்ரேலியப் படைகள் சுயஸ் கால்வாயை கைப்பற்றுவதற்கு, எகிப்தின் மீது போர் தொடுத்து. 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாள் போரின் போது, இஸ்ரேல் எகிப்தின் சினாய் தீபகற்பம் முழுவதும் கைப்பற்றியதால், சுயஸ் கால்வாய் மூடப்பட்டது.பின் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, 1975ஆம் ஆண்டில் சுயஸ் கால்வாய் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.

23 மார்ச் 2021 அன்று சுயஸ் கால்வாயில் எவர்கிரீன் எனும் கொள்கலன் கப்பல் தரைதட்டி நின்றதால் கப்பல் போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டது.[4]

சுயஸ் கால்வாய் மூலம் உலகின் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கட்டணம் மூலம் எகிப்திய அரசுக்கு 2023ஆம் ஆண்டில் $10.25 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியது. 2024ஆம் ஆண்டில் யேமன் நாட்டின் [[ஹூத்திகள்|ஹூத்தி போராளிகள் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களால், 2024ஆம் ஆண்டில் சுயஸ் கால்வாய் வருமானம் $4 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

William Matthew Flinders Petrie, A History of Egypt. Volume 3: From the XIXth to the XXXth Dynasties, Adamant Media Corporation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-543-99326-4, p. 366 Barbara Watterson (1997), The Egyptians, Blackwell Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-21195-0, p. 186

  1. 1.0 1.1 1.2 "Egypt: Governorates, Major Cities & Towns - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de. Retrieved 18 March 2023.
  2. "GDP BY GOVERNORATE", mped.gov.eg
  3. Suez Canal Authority
  4. A huge ship is blocking a vital trade artery. It could get costly Julia Horowitz, CNN Business; updated 25 March 2021 www.cnn.com, accessed 1 April 2021
  5. "El Suez Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. Archived from the original on October 4, 2023. Retrieved October 4, 2023.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயஸ்&oldid=4350176" இலிருந்து மீள்விக்கப்பட்டது