சுயமிக் குச்சி
Appearance
சுயமிக் குச்சி (Selfie stick) என்பது தன்னையும் தன்னுடன் இருப்பவரையும் மற்றும் சூழலையும் புகைப்படக் கருவியின் மூலமோ அல்லது கைபேசியின் மூலமோ புகைப்படமெடுக்க உதவும் குச்சி ஆகும்.[1] இது ஒற்றைக் கையினால் கையாளும்படியான அமைப்பைக் கொண்டிருக்கும். நீட்டும் வைகையிலான குச்சியின் ஒரு முனையில் கைபேசியை இணைக்கும் வசதி இருக்கும். உலோகத்திலான இக்குச்சியின் மற்றொரு முனையில் கைப்பிடி அமைந்திருக்கும். சுயமிக் குச்சி உபயோகிக்கும்போது புளூடூத் வசதியுடனோ அல்லது தானியங்கி முறையிலோ புகைப்படம் எடுக்கப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "In Defense of the Selfie Stick". TheHuffingtonPost.com, Inc. 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.