உள்ளடக்கத்துக்குச் செல்

சுயநல அரக்கன் (கதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ் நூல் அட்டை
ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ் நூலாசிரியர் ஆஸ்கார் வைல்டு

சுயநல அரக்கன் (The Selfish Giant) ஆஸ்கார் வைல்டு என்பவர் எழுதிய ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ் என்னும் நூலில் உள்ள ஐந்து கதைகளில் ஒன்றாகும். இந்நூல் சிறுவர்களுக்கானது. ஒரு சுயநல அரக்கன் எவ்வாறு அன்பானவனாக மாறினான் என்பதுதான் இக்கதை.

கதைச் சுருக்கம்

[தொகு]

அரக்கனின் குணம்

[தொகு]

ஒரு அரக்கன் தனது அழகான தோட்டத்தை வைத்திருந்தான். இத்தோட்டம் மிகவும் பச்சைப் பசேலாகவும், அழகிய மலர்களும், முத்தான கனிகளும் இருந்தன. பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் தினமும் மதியம் அரக்கனின் தோட்டதில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். அரக்கன் தனது நண்பரின் வீட்டில் ஏழு வருடம் தங்கியிருந்தார். பிறகு தன் தோட்டத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதைக் கண்டு துரத்திவிட்டார். தோட்டத்தைச்சுற்றி உயரமான சுவரை அமைத்து ஒரு அறிவிப்புப்பலகையை மாட்டினார். அப்பலகையில் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

பாலைவனத் தோட்டம்

[தொகு]

குழந்தைகளுக்கு வேறு விளையாட இடமின்றித் தவித்தனர். குழந்தைகள் விளையாட வராததால் தோட்டத்தில் வெறும் பனிமூட்டமும் புயலுமாய் வெகுகாலமாகக் காணப்பட்டது. இத்தோட்டம் எதற்காக மாறியது என்பதே அரக்கனுக்குத் தெரியவில்லை. இதனால் அரக்கன் மிகவும் கவலையுற்றான்.

அரக்கனின் திடீர் மாற்றம்

[தொகு]

ஒரு நாள் அரக்கன் திடீர் விழித்தெழுந்தார். தோட்டத்தில் அப்போது ஒரு பறவை பாடிக்கொண்டிருப்பதையும்இளவேனிற்காலம் வந்துவிட்டதையும் பார்த்தார். தோட்ட சுவரின் ஒரு இடைவெளி வழியே குழந்தைகள் தோட்டத்துக்குள் வந்து விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டார். ஆனால் அவரைப் பார்த்த குழந்தைகள் பயந்து ஓடினர். ஆனால் மரத்தில் ஏற முயன்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மட்டும் அங்கிருந்தான். அவனுக்கு அவர் உதவி செய்தார். அச்சிறுவன் மகிழ்ச்சியாக அரக்கனை முத்தமிட்டான்.

அன்பான காட்சி

[தொகு]

அரக்கன் தான் கட்டிய பெருஞ்சுவரை கோடாரியால் இடித்துவிட்டு அக்குழந்தைகளிடம் அது அவர்களுடைய தோட்டமென்று கூறினார். குழந்தைகளுடன் விளையாடினார். ஆனால் அச்சிறுவன் அங்கு இல்லை. வருடங்கள் கடந்தன. அரக்கனும் வயதாகி மற்றும் தளர்ந்துவிட்டார். ஆனால் அச்சிறுவனை மீண்டும் காணவில்லை.

முடிவு

[தொகு]

ஒரு நாள் சிறுவன் மரத்தின் கீழ் நின்றிருப்பதை அரக்கன் கண்டார். அச்சிறுவன் உடம்பில் காயங்கள் இருந்தது. "யார் உன்னைக் காயப்படுத்தியது என்று சொல், நான் அவர்களைக் கொல்வேன்" என்று வினவ அவன் இதெல்லாம் அன்பின் காயங்கள் என்றான். அவருள் ஏதோவொரு உணர்வெழ அவர் சிறுவன் முன் மண்டியிட்டு ”நீ யார்?” என்று வினவினார். அச்சிறுவன் ”நீங்கள் உங்கள் தோட்டத்தில் எனக்கு விளையாட இடம் கொடுத்தீர்கள்; இப்பொழுது என்னோடு என் தோட்டத்துக்கு (சொர்க்கத்துக்கு) வாருங்கள்” என்று சொன்னான். அந்த அரக்கன் சந்தோஷமாக உயிர் துறந்தார்; அன்று மதியம் தோட்டத்துக்கு வந்த குழந்தைகள் இறந்துபோன அவரது உடலை அம்மரத்தடியில் மலர்களால் மூடப்பட்ட நிலையில் கண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயநல_அரக்கன்_(கதை)&oldid=3609222" இலிருந்து மீள்விக்கப்பட்டது