சுமேசு அச்சுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமேசு அச்சுதன்
Sumesh Achuthan.jpg
மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் மாநிலத் தலைவர், கேரள பிரதேச காங்கிரசு குழு
பதவியில்
2018-முதல்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 அக்டோபர் 1975 (1975-10-05) (அகவை 44)
பாலக்காடு
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சுவப்னா சுமேசு
பிள்ளைகள்
 • மீனாட்சி
 • மகாலட்சுமி
 • மகேசுவரி
இருப்பிடம் பாலக்காடு

சுமேசு அச்சுதன் (Sumesh Achuthan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 அன்று பிறந்தார். கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியைச் சேர்ந்த இவர். கேரள பிரதேச காங்கிரசு செயற்குழுவில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளார். [1] மேலும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பாலக்காடு நகரத் துணைத் தலைவர் என்ற பொறுப்பிலும் உள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

முன்னாள் கேரள சட்டமன்ற சிற்றூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான கே. அச்சுதன் மற்றும் காலம்சென்ற சி.கே.சுதா தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாணவர் அணியான கேரள மாணவர் ஒன்றியம் மூலம் பள்ளிப் பருவத்திலேயே இவர் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பாலக்காடு காங்கிரசு செயற்குழுவின் துணைத் தலைவர், இந்திய இளைஞர் காங்கிரசு அமைப்பின் பாலக்காடு மாவட்டத் தலைவர், மற்றும் தற்போது பாலக்காடு மாவட்டத்தின் காங்கிரசு செயற்குழு துணைத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் என்னும் ஊரின் அம்பேத்கார் காலனி மக்களுடன் சேர்ந்து சுமேசு சமபந்திபோசனம் நிகழ்வை நடத்தினார். [2]. மேலும் முதலமாதா கிராம இந்துக்கள் தீண்டாமை நடைமுறையை சக்கலிய சமுகத்தினரிடம் கடைப்பிடிப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார். [3]. இந் நிகழ்ச்சி கேரளத்தின் முன்னேற்றப் பாதைக்கு களங்கத்தை உண்டாக்கியது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் சுமேசு அச்சுதனுடன் சென்று கோவிந்தபுரம் காலனியை பார்வையிட்ட பின்னரே இப்பிரச்சினையின் தீவிரத்தைப் அறிந்து கொண்டதாக திரிதலா சட்ட மன்ற உறுப்பினர் வி.டி. பல்ராம் கூறினார்.

இரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க காஞ்சிகோடு என்னும் ஊரில் நில அபகரிப்பு பிரச்சனை எழுந்த்து 2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சுமேசு இவ்வூரைப் பார்வையிட்டார். இப்பிரச்சினையை மத்திய அரசுக்கு மேல் முறையீடு செய்து காஞ்சிகோடு இரயில் பெட்டி தொழிற்சாலை அமைவிடத்தை அரியானா மாநிலத்துக்கு மாற்றம் செய்தார்.[4]. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரயில் பெட்டித் தொழிற்சாலையை கேரள மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்தது என்றும் கேரள இடதுசாரி அரசு அதற்கான நிலத்தை கையகப்படுத்தி வழங்க நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது என்றும் அவர் கூறினார். நிலம் கையகப்படுத்துதலை உள்ளுர் பொதுவுடமைக் கட்சியினர் விரைவு படுத்தியிருந்தால் இத்தொழிற்சாலை இடம்பெயர்ந்திருக்காது என்றும் குற்றம் சாட்டினார். நாடளுமன்ற உறுப்பினர் என்.பி ராசேசுசும் இக்காலதாமதமே இதற்கு காரணம் என்று மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தினார். மேலும் தனியாரிடமிருந்து நிலம் அபகரிப்பதை காங்கிரசு கட்சியினர் எதிர்த்த்தும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

வனவிலங்குகளால் வேளாண்பயிர்கள் அழிக்கப் படுவதற்கு கொடுக்கப்படும் இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்குமாறு சுமேசு 2017 ஆம் ஆண்டு அரசிடம் கோரினார். எனவே தென்னை மரத்திற்கு 770 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாகவும், நெற்பயிருக்கு 30000 ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கக் கோரினார். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீட்டுத் தொகையையும் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார்.[5].

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சனநாயக வாலிபர் சங்கப் பெண்கள் அணித்தலைவியின் குற்றச்சாட்டைப் பற்றி இவரும் பேசினார். இந்திய பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சசிக்கு எதிராக இப்பெண்மணி மண்ணார்காட் காவல் துறை ஆய்வாளரிடம் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். இதனால் அந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறு மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டார்[6]

2018 ஆம் ஆண்டில் சுமேசு கேரள பிரதேச காங்கிரசு செயற்குழு தலைவராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத் துறைத் தலைவராகவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார்.

பதவிகள்[தொகு]

சுமேசு அச்சுதன் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்.

 • இந்திய இளையோர் காங்கிரசு: மாவட்டத் துணைத்தலைவர், பாலக்காடு 2004–2008
 • இந்திய இளையோர் காங்கிரசு: மாவட்டத் தலைவர், பாலக்காடு, 2008–2010
 • இந்திய தேசிய காங்கிரசு: மாவட்டத் துணைத்தலைவர், பாலக்காடு 2015 முதல்– தலைவர்
 • கேரள பிரதேச காங்கிரசு குழுவின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தலைவர் 2018 முதல்
 • இந்திய தேசிய மாற்றுத் திறனாளிகளின் காங்கிரசு குழு தலைவர், 2009- முதல்
 • பாலக்காடு கால்பந்து சங்கத்தின் தலைவர்: 2012 முதல்
 • மகாத்மா காந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், 2015 முதல்

மேற்கோள்கள்[தொகு]

 1. "സുമേഷ് അച്യുതൻ കെ.പി.സി.സി. ഒ.ബി.സി. വകുപ്പ് ചെയർമാൻ", Mathrubhumi, 14 October 2018, retrieved 14 October 2018
 2. "A village on Kerala-TN border is still fighting caste-based discriminations", தி இந்து, 5 June 2017, retrieved 5 June 2017
 3. "It's 2017, but untouchability is still alive and well in this Palakkad village, say local residents", The News Minute, 11 June 2017, retrieved 11 June 2017
 4. "Protest against move to shift coach factory", New Indian Express, 18 June 2017, retrieved 18 June 2017
 5. "വന്യമൃഗങ്ങൾ മൂലമുള്ള കൃഷിനാശം: നഷ്ടപരിഹാരം വർധിപ്പിക്കണം", Manorama Online, 21 July 2017, retrieved 21 July 2017
 6. "DYFI Leader Alleges Sex Abuse by Legislator", Deccan Chronicle, 5 September 2018, retrieved 5 September 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமேசு_அச்சுதன்&oldid=2761154" இருந்து மீள்விக்கப்பட்டது