சுமூத்தி

சுமூத்தி (Smoothie)என்பது ஒரு சுமூத்தி பொதுவாக பழச்சாறு ஆகும். பால், தயிர் அல்லது பனிகூழ் போன்றவைகளை அடிப்படையைக் கொண்டு தயாரிக்கப்படு பானம் ஆகும்.[1] பழங்கள், காய்கறிகள், பால், நொறுக்கப்பட்ட பனிக்கட்டி, தயிர் அல்லது ஊட்டச்சத்து நிறைந்த பிற பொருட்களும் சேர்க்கப்பட்டு தயரிக்கப்படுகின்றது.
வரலாறு
[தொகு]அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள சுகாதார உணவு கடைகள் சுமூத்திகளை விற்கத் தொடங்கின.[2] "சுமூத்தி" என்ற சொல் 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் சமையல் குறிப்புகளிலும் வர்த்தக முத்திரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.[3]1960 ஆம் ஆண்டுகளில், சிடீவ் குனாவ் என்பவர் ஒரு சோடா விற்பனையாளர் சுமூத்திகளுடன் பரிசோதனை செய்யத் தொடங்கினார். குனாவ், பழச்சாறுகள், காய்கறிகள், புரதப் பொடி மற்றும் வைட்டமின்களின் தனித்துவமான கலவைகளைப் பயன்படுத்தி தனது சொந்த பயன்பாட்டிற்க்காக தயார் செய்தார். இவை ஒரு புதுமையானதகவும் ருசிப்பதற்கு நன்றாகவும் இருந்தன. குனாவ் தனது சுமூத்தி விற்பனையில் ஆரம்பகால வெற்றியைக் கண்டறிந்து சுமூத்தி கிங் என்று நிறுவினார். சுமூத்தி அமெரிக்கா முழுவதும் விரிவடைந்து வந்தது. இது மற்ற சுமூத்தி வணிகங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. பின்னர், சாக்லேட் மற்றும் சுப்ளெண்டா போன்ற இனிப்பான பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் துரித உணவுகளால் சுமூத்தி மாற்றியமைக்கப்பட்டது.[4]2000ஆம் ஆண்டுகளில், நுகர்வோர் தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதற்கான ஒரு மாற்றாக, வீட்டில் சுமூத்திகளைத் தயாரிக்கத் தொடங்கினர்..[5]
ஊட்டச்சத்து
[தொகு]
ஒரு சுமூத்தியின் ஊட்டச்சத்து இதன் மூலப்பொருட்கள் மற்றும் இவற்றின் விகிதங்களைப் பொறுத்து அமைகிறது. பல சுமூத்திகளில் அதிக அளவு அல்லது பல பங்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இவை ஆரோக்கியமான உணகளாக பரிந்துரைக்கப்படுகின்றன மேலும் ஒரு வேளை உணவிற்கு மாற்றாகப் பயன்படுத்தப் படுகின்றன.[6] இருப்பினும், அதிக அளவு சர்க்கரையைக் கொண்ட பழச்சாறு கலோரி உடல் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும்.[7][8] புரதப் பொடிகள், இனிப்பூட்டிகள் அல்லது பனிகூழ் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.[6][9][10] அரைக்கப்படாத உணவுகளைப் போலவே அதே அளவு ஆற்றலை வழங்கினாலும், சுமூத்திகள் குறைவான திருப்தியையே அளிக்கின்றன என்று ஒரு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[11]
இதன் வகைகள்
[தொகு]பச்சை ஸ்மூத்தி ஒரு பச்சை சுமூத்தியில் பொதுவாக 40–50% பச்சை காய்கறிகள் இருக்கும். இவை பொதுவாக கீரை, அல்லது ப்ரோக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகளாகும். மீதமுள்ள பொருட்கள் பெரும்பாலும் முழுவதுமாக பழங்களாக இருக்கும்.[12][13][14] பெரும்பாலான பச்சை இலைக் காய்கறிகள் பச்சையாகப் பரிமாறப்படும்போது கசப்பான சுவையைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சில குறைவான கசப்புள்ள காய்கறிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது பழங்கள் அல்லது பிற இனிப்புப் பொருட்களுடன் சேர்ப்பதன் மூலமோ இதைச் சரிசெய்யலாம்.[15]
புரோட்டீன் சுமூத்தி புரோட்டீன் சுமூத்தி என்பது தண்ணீர் அல்லது பால், புரோட்டீன் பவுடர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றை நாளின் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். மேலும் தங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு புரதச் கூடுதல் உணவாக பயன்படுத்தப்படுகிறது. புரோட்டீன் பவுடரை தனியாக பால் அல்லது தண்ணீருடன் கலக்கும்போது அது சுண்ணாம்பு போன்ற சுவையைக் கொண்டிருக்கும். புரோட்டீன் சுமூத்தியானது, பழங்கள் அல்லது பிற இனிப்பூட்டிகளைச் சேர்ப்பதன் மூலம் புரோட்டீன் பவுடரின் சுவையை மேம்படுத்துகிறது.[16]
தயிர் சுமூத்தி தயிர் சுமூத்தி என்பது புரதச்சத்துக்காகவும், பானத்திற்கு ஒரு கூழ் தன்மையைச் சேர்க்கவும் தயிர் உள்ளடக்கிய ஒரு சுமூத்தி ஆகும். குறிப்பாக, கிரேக்க தயிர், அதன் வடிகட்டப்பட்ட தன்மை காரணமாக ஒரு கெட்டியாக்கும் பொருளாகவும், அதன் கூறப்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் சேர்க்கப்படுகிறது.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Smoothie". Oxford Dictionary, Oxford University Press. 2018. Archived from the original on October 25, 2018.
- ↑ Brown, Ellen (2005). The Complete Idiot's Guide to Smoothies. Penguin. p. 3. ISBN 1-59257-318-5.
- ↑ "Smoothie". Online Etymology Dictionary, Douglas Harper. 2018. Retrieved 25 October 2018.
- ↑ Moffitt, Sally (2014-06-01). "Sources: Food and Drink in American History: A "Full Course" Encyclopedia.". Reference & User Services Quarterly 53 (4): 377. doi:10.5860/rusq.53n4.377a. பன்னாட்டுத் தர தொடர் எண்:1094-9054. https://archive.org/details/sim_reference-user-services-quarterly_summer-2014_53_4/page/n98.
- ↑ Walkling-Ribeiro, Markus; Noci, Francesco; Cronin, Denis A.; Lyng, James G.; Morgan, Desmond J. (2010-09-01). "Shelf life and sensory attributes of a fruit smoothie-type beverage processed with moderate heat and pulsed electric fields" (in en). LWT - Food Science and Technology 43 (7): 1067–1073. doi:10.1016/j.lwt.2010.02.010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0023-6438. https://www.sciencedirect.com/science/article/pii/S0023643810000708.
- 1 2 Jeff Olsen (26 July 2017). "Mayo Clinic Minute: Get smart about smoothies". Mayo Clinic News Network. Retrieved 25 October 2018.
- ↑ "Get the Facts: Sugar-Sweetened Beverages and Consumption". Centers for Disease Control and Prevention, US Department of Health and Human Services. 23 October 2018. Retrieved 25 October 2018.
- ↑ Boseley, Sarah (2013-09-07). "Smoothies and fruit juices are a new risk to health, US scientists warn" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/society/2013/sep/07/smoothies-fruit-juices-new-health-risk.
- ↑ Darla Stoker; Carrie Durward. "Smoothies—Helpful or Harmful?" (in ஆங்கிலம்). Nutrition Extension - Utah State University. Retrieved 2022-03-01.
- ↑ "Rethink Your Drink". Centers for Disease Control and Prevention, US Department of Health and Human Services. 23 September 2015. Retrieved 25 October 2018.
- ↑ Rogers, Peter J.; Shahrokni, Roya (2018-03-30). "A Comparison of the Satiety Effects of a Fruit Smoothie, Its Fresh Fruit Equivalent and Other Drinks". Nutrients 10 (4): 431. doi:10.3390/nu10040431. பன்னாட்டுத் தர தொடர் எண்:2072-6643. பப்மெட்:29601488.
- ↑ Zavasta, Tonya (2009), "Smooth Moves: Enjoy the Benefit of Green Smoothies and Puddings", Raw Food and Hot Yoga, BR, p. 39, ISBN 978-0-9742434-9-8,
A green smoothie...is a mixture of about 60 percent fruit and 40 percent leafy greens blended together in a delicious, nourishing beverage.
- ↑ Smith Jones, Susan (2008). Health Bliss, p.179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4019-1241-9. "...about 50-60 percent fruit and 40-50 percent greens."
- ↑ Caldwell, Kim (2009) How Green Smoothies Saved My Life: A Guide for Using Green Smoothies, Uplifted Thinking, and Live Food to Enhance Your Life, p.12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-615-30290-4.
- ↑ "Drink your fruits and vegetables?". Harvard Heart Letter, Harvard Medical School. May 2018. Archived from the original on 25 October 2018. Retrieved 25 October 2018.
- ↑ "How to build a better smoothie, according to a nutritionist". NBC News (in ஆங்கிலம்). 29 May 2018. Retrieved 2022-03-01.
- ↑ Cassetty, Samantha (2018-05-27). "How to build a better smoothie, according to a nutritionist". NBC (in ஆங்கிலம்). Archived from the original on 2018-05-27. Retrieved 2024-01-14.
- சாறு
- மத்திய கிழக்கின் பண்பாடு
- இந்திய உணவுகள்
- பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள்
- நாடுகள் வாரியாக உணவுகள்
- பிரதேசம் வாரியாகப் பண்பாடு
- ஆப்பிரிக்கப் பண்பாடு
- பிரதேசம் வாரியாக ஆசியப் பண்பாடு
- ஐரோப்பியப் பண்பாடுகள்
- இந்தியப் பண்பாடு
- வடக்கு ஆப்பிரிக்காவின் புவியியல்
- மத்திய கிழக்கின் புவியியல்
- இந்தியாவில் உடல்நலம்
- மத்திய கிழக்கு
- வரிசைப்படுத்தப்படாத பக்கங்கள்
- வடக்கு அரைக்கோளம்
- தடப்பகுப்புகள்
- இனிப்பு-விருந்துக்குப் பின்
- பால்