சுமிருதி மந்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமிருதி மந்தனா

சுமிருதி ஸ்ரீநிவாஸ் மந்தனா(Smriti Shriniwas Mandhana) ஜூலை 18,1996ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய அணியின் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இடது கை துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2] இவரது முதல் ஒரு நாள் போட்டி 2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாத்திற்கு எதிராக விளையாடினார். ஐ.சி.சி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார். ஜுன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு சிறந்த சர்வதேச துடுப்பாட்ட வீரருக்கான பிசிசிஐ விருதினை அறிவித்தது.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மந்தனா ஜுலை 18, 1996 இல் மும்பையில் பிறந்தார். இவரின் தாய் சுமிதா தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனா ஆவர்.[4][5]  இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது மகாராட்டிரத்தில் உள்ள சங்கிலி, மாதவநகருக்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பள்ளியில் அவர் கல்வி பயின்றார். இவரின் தந்தை மற்றும் சகோதரர் ஸ்ரவன் இருவரும் சங்கிலி மாவட்ட துடுப்பாட்ட அணிக்காக போட்டிகளில் விளையாடி  உள்ளனர். இவரின் சகோதரர் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 19 வயதினருக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடியதனைப் பார்த்தது இவருக்கு ஊக்கமாய் அமைந்தது.[6] மந்தனாவின் குடும்பம் இவரின் துடுப்பாட்ட வாழ்க்கைக்கு உதவினர். அவரின் தந்தை அவரின் துடுப்பாட்ட திட்டமிடலையும் தாய் , அவரின் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆடைகள் போன்ற பிறவற்றையும் கவனித்து வந்தார். அவரின் சகோதரர் வலைப்பயிற்சியின் போது பந்து வீசினார்.[4][5]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இரட்டை நூறுகள் அடித்த பிறகு பரவலாக அறியப்பட்டார். அக்டோபரில்  2013 இல்  வதோதராவில் உள்ள அலெம்பிக் துடுப்பாட்ட,மைதானத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரின் குஜராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் 150 பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்தார்.[7] 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் வாகையாளர் கோப்பைக்கான தொடரில் மூன்று அரை நூறுகள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இருதிப்போட்டியில் 82 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து இந்தியா புளூவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் வெல்வதற்கு உதவினார். 192 ஓட்டங்கள் எடுத்து அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்..[8]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2014 ஆம் ஆண்டில் வோர்ம்ஸ்லீ பார்க்கில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் முதன் முறையாக விளையாடினார். முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 51 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். பின் திருஷ் காமினி யுடன் துவக்க வீரராக களம் இறங்கி 76 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்குத் தேவையான 182 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற உதவினார்.[9][10] 2015-16 ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற அந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 109 பந்துகளை எதிர்கொண்டு அதில் 102 ஓட்டங்களை எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.[11] 2016 ஆம் ஆண்டில் இந்திய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்த பெண்கள் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் இவரே.  [12] முன்புற தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையேயான தொடரிலும் இவரால் விளையாட இயலவில்லை. ஐந்து மாத ஓய்விற்குப் பிறகு இவர் 2017 பெண்கள் துடுப்பாட்டக் கிண்ணத் தொடரில் விளையாடினார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Smriti Mandhana". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  2. "Smriti Mandhana's journey from following her brother to practice to becoming a pivotal India batsman". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  3. "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
  4. 4.0 4.1 Patnaik, Sidhanta (7 September 2014). "Mandhana’s journey from Sangli to England". Wisden India இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224211957/http://www.wisdenindia.com/cricket-article/mandhanas-journey-sangli-england/125622. பார்த்த நாள்: 28 October 2016. 
  5. 5.0 5.1 Swamy, Kumar (17 August 2014). "Smriti Mandhana logs Test win on debut in UK". The Times of India. http://timesofindia.indiatimes.com/news/Smriti-Mandhana-logs-Test-win-on-debut-in-UK/articleshow/40326248.cms. பார்த்த நாள்: 28 October 2016. 
  6. Kishore, Shashank (18 March 2016). "The prodigious journey of Smriti Mandhana". ESPNcricinfo. http://www.espncricinfo.com/women/content/story/984993.html. பார்த்த நாள்: 28 October 2016. 
  7. "Smriti makes good use of Dravid's bat, scores double ton". The Times of India. 31 October 2013. http://timesofindia.indiatimes.com/news/Smriti-makes-good-use-of-Dravids-bat-scores-double-ton/articleshow/24953642.cms. பார்த்த நாள்: 23 October 2016. 
  8. "Mandhana powers India Red to title". Wisden India. 25 October 2016 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224211951/http://www.wisdenindia.com/cricket-news/mandhana-powers-india-red-to-title/226886. பார்த்த நாள்: 28 October 2016. 
  9. "Raj key in India's test of nerve". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  10. "Nagraj Gollapudi speaks to members of India's winning women's team". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  11. "Australia Women ace 253 chase to seal series". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  12. "Smriti lone Indian in ICC women's team". தி இந்து. 15 December 2016. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
  13. Ghosh, Annesha (25 June 2017). "No more glasses, but same tunnel vision for Mandhana". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1105812.html. பார்த்த நாள்: 25 June 2017. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிருதி_மந்தனா&oldid=3772863" இலிருந்து மீள்விக்கப்பட்டது