உள்ளடக்கத்துக்குச் செல்

சுமித் கோதாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமித் கோதாரா
அமைச்சர், இராஜஸ்தான் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
30 திசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
அரிபாவ் பாகடே
துறைகள்
பட்டியல்
    • உணவு & குடிமைப் பொருட்கள் வழங்கல்
    • நுகர்வோர் நலன்
முன்னையவர்பிரதாப் சிங் கச்சொரியவாஷ்
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்மாணிக் சந்த் சுரானா
தொகுதிஇலூங்கரன்சர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1973 (1973-12-11) (அகவை 52)
மல்சார், இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சாந்தா சவுத்ரி[1]
பணிஅரசியல்வாதி

சுமித் கோதாரா (Sumit Godara-பிறப்பு 11 திசம்பர் 1973) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் அரசாங்கத்தின் அமைச்சரும் ஆவார். இவர் உணவு மற்றும் குடிமை பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் ஆகிய துறைகளை கையாளுகிறார்.[2] பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர் இராசத்தான் சட்டப்பேரவையில் லுன்கரான்சர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 15ஆவது மற்றும் 16ஆவது சட்டப்பேரவைகளிலும் இவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

பிறப்பு

[தொகு]

சுமித் கோதாரா 1973 திசம்பர் 11 அன்று இராசத்தானின் மலாசரில் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2018 இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில், சுமித் கோதாரா பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக லுன்கரான்சார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 15ஆவது இராசத்தான் சட்டசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

2023 இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் இராஜேந்திர மூண்டை தோற்கடித்து 60,452 வாக்குகளைப் பெற்றார்.[5][6]

பஜன் லால் சர்மா அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமையில் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சராக கோதாரா நியமிக்கப்பட்டார்.[7][8]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
ஆண்டு பதவி தொகுதி கட்சி வாக்குகள் (சுமித் கோதரா) % இரண்டாமிடம் கட்சி வாக்குகள் % முடிவுகள் மேற்கோள்
2023 சட்டமன்ற உறுப்பினர் இலூங்கரன்சர் பாரதிய ஜனதா கட்சி 60,452 29.99 இராஜேந்திர மூண்ட் இந்திய தேசிய காங்கிரசு 51,583 25.59 [9]
2018 72,822 42.12 வீரேந்திர பெனிவால் இந்திய தேசிய காங்கிரசு 61,969 35.84 [9]
2013 47,715 32.15 மாணிக் சந்த் சுரானா சுயேச்சை 52,532 35.40 [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sumit Godara: News, Photos, Latest News Headlines about Sumit Godara - Aaj Tak". आज तक (in இந்தி). Retrieved 15 May 2025.
  2. "Sumit Godara Latest News, Updates in Hindi | सुमित गोदारा के समाचार और अपडेट - AajTak". आज तक (in இந்தி). Retrieved 2025-06-29.
  3. "Sumit Godara BJP Candidate 2018 विधानसभा चुनाव परिणाम Lunkaransar". Amar Ujala. Retrieved 6 March 2020.
  4. "लूणकरनसर विधायक गोदारा ने किसानों के लिए सहकारिता मंत्री को लिखा पत्र". Abhay India (in இந்தி). 12 February 2024. Retrieved 15 May 2025.
  5. "Lunkaransar, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Lunkaransar सीट से फिर जीती BJP". आज तक (in இந்தி). Retrieved 2023-12-09.
  6. "भजन कैबिनेट में बीकानेर से दो विधायक". दैनिक भास्कर (in இந்தி). DB Corp Ltd. 30 December 2023. Retrieved 15 May 2025.
  7. "राजस्थान में भजनलाल सरकार में लूणकरनसर विधायक सुमित गोदारा ने ली मंत्री पद की शपथ". ETV Bharat (in இந்தி). 30 December 2023. Retrieved 15 May 2025.
  8. "Rajasthan: If application for Shramik Card eShram is rejected, one more chance will be given – Know what Food and Civil Supplies Minister Sumit Godara said in Rajasthan Vidhan Sabha". Patrika (in இந்தி). 29 February 2024. Retrieved 15 May 2025.
  9. 1 2 3 "Lunkaransar Constituency Election Results 2023: Lunkaransar Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India. Retrieved 15 May 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_கோதாரா&oldid=4385583" இலிருந்து மீள்விக்கப்பட்டது