சுமித்ரா தேவி (நடிகை)
சுமித்ரா தேவி | |
---|---|
![]() 1956இல் சுமித்ரா தேவி | |
தாய்மொழியில் பெயர் | সুমিত্রা দেবী |
பிறப்பு | நீலிமா சட்டோபாத்யாய்[1] சூலை 22, 1923 [1][2] சியுரி, பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம்[1] |
இறப்பு | 28 ஆகத்து 1990[1] | (அகவை 67)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசபந்து மகளிர் உயர்நிலைப் பள்ளி, கொல்கத்தா[1] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1944-1964 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சந்தி மேரி பெஹன் பதேர் தேவி அபிஜோக் |
வாழ்க்கைத் துணை | தேவி முகர்ஜி |
பிள்ளைகள் | bulbul[3] |
விருதுகள் | வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருது.[1] |
சகாப்தம் | 1940s 1950s |
சுமித்ரா தேவி (Sumitra Devi) (listen (உதவி·தகவல்)) (நீலிமா சட்டோபாத்யாய்) (22 சூலை 1923 - 28 ஆகத்து 1990) 1940களிலும், 1950களிலும் பாலிவுட், மேற்கு வங்காளத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஓர் இந்திய நடிகையாவார்.[4] [5] [6] 1952ஆம் ஆண்டு தாதா குஞ்சால் இயக்கிய மம்தா என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் நினைவு கூறப் படுகிறார். இவர் இரண்டு முறை வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். [7] [8] இவர் தனது காலத்தின் நேர்த்தியான அழகிகளில் ஒருவராக இருந்தார். மேலும், பிரதீப் குமார், உத்தம்குமார் போன்ற சக கலைஞர்களால் இவரது காலத்தின் மிக அழகான பெண்ணாக கருதப்பட்டார்.[9] [10][11] [12] [13]
சுடசரிதை[தொகு]
சுமித்ரா தேவி, மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்திலுள்ளா சியுரி என்ற இடத்தில் என்ற ஒரு பணக்கார பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞரான முரளி சட்டோபாத்யாய் என்பவருக்கு மகளாக பிறந்தார்.[1] தனது இளம் வயதில், மூத்த நடிகை கனன் தேவியின் அழகால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ஓர் நடிகையாக ஆசைப்பட்டார்.[14] [15]
தொழில்[தொகு]
1943ஆம் ஆண்டில் இவர் நியூ தியேட்டர்ஸ் என்ற படத் தயாரிப்பு அலுவலகத்தில் ஒரு பட வாய்ப்புக்காக அவழைக்கப்பட்டார். ஹேம்சந்தர் சந்தரின் மேரி பஹென் (1944) என்ற படத்தில் கே.எல். சைகலுக்கு இணையாக நடித்தார். [16] இந்த படத்தின் தயாரிப்பின் போது அபூர்பா மித்ராவின் சந்தி என்ற வங்காளத் திரைப்படத்தில் (1944) இவர் கதாநாயகியாக நடித்தார். [16] இந்த படம் மகத்தான வெற்றியை பெற்றது . மேலும், 1945இல் வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது. [1] 1940களின் பிற்பகுதியில் இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வசியத்நாமா (1945), பாய் தூஜ் (1947), ஊஞ்ச் நீச் (1948) , விஜய் யாத்ரா (1948) போன்ற படங்களில் நடித்தார். [1] குஞ்சாலின் மம்தா (1952) படத்தில் ஒற்றை தாயாக நடித்ததற்காக இவர் பாராட்டப்பட்டார். [16] தீவானா (1952), குங்க்ரூ (1952), மயூர்பங்க் (1954), சோர் பஜார் (1954), ஜக்தே ரஹோ (1956) போன்ற படங்களில் நடித்ததற்காகவும் இவர் மேலும் பாராட்டப்பட்டார். [1]
அபிஜாக் (1947), பதேர் தேவி (1947), பிரதீபாத் (1948), ஜாய்ஜத்ரா (1948), சுவாமி (1949), தேவி சவுத்ராணி (1949), சமர் (1950), தஸ்யு மோகன் (1955) போன்ற மேற்கு வங்காளத் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[16] கார்த்திக் சட்டோபாத்யாயின் சாஹேப் பீபி கோலம் என்ற படத்தில் (1956) ஒரு நில உரிமையாளரின் மது அடிமையான அழகிய மனைவியாக இவர் சித்தரிக்கப்பட்டார். இது பிமல் மித்ரா என்பவர் எழுதி அதே பெயரில் வெளியான உன்னதமான புதினத்தின் தழுவலாகும். ஐம்பதுகளின் பிற்பகுதியில் , சீனாவில் நடந்த ஆசியத் திரைப்பட விழாவிற்கு இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.
குடும்பம்[தொகு]
இவரது சகோதரரின் பெயர் ரணஜித் சட்டோபாத்யாய். இவர், பீகாரின் முசாபர்பூரில் வளர்க்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பம் காரணமாக முசாபர்பூரில் உள்ள இவர்களது வீடும் நிலமும் சேதமடைந்த பின்னர் இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தது.[17]
திருமணம்[தொகு]
சுமித்ரா தேவி, 21 அக்டோபர் 1946 இல் நடிகர் தேவி முகர்ஜியை மணந்தார்.[1] 1 திசம்பர் 1947 இல், இவர்களுக்கு புல்புல் என்ற மகன் பிறந்தார். இவரது கணவர் முகர்ஜி 11 டிசம்பர் 1947 அன்று காலமானார். [18]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Sumitra Devi – Interview (1952)". cineplot.com (ஆங்கிலம்). 2018-02-02 அன்று பார்க்கப்பட்டது."Sumitra Devi – Interview (1952)". cineplot.com. Retrieved 2 February 2018.
- ↑ "Sumitra Devi". Friday Moviez. 2019-08-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gooptu, Sharmistha (2010-11-01) (in en). Bengali Cinema: 'An Other Nation'. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136912160. https://books.google.com/books?id=ugbGBQAAQBAJ&q=sumitra+devi+actress&pg=PT199.
- ↑ "Sumitra Devi movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. 2018-02-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sumitra Devi". www.gomolo.com. 2019-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ lyricstashan.com. "Best Sumitra Devi song lyrics collection - LyricsTashan". lyricstashan.com. 2018-01-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "10 Greatest Bengali Actresses of All Time". https://www.thecinemaholic.com/best-bengali-actresses/.
- ↑ "Sumitra Devi – Interview (1952)". cineplot.com (ஆங்கிலம்). 2018-02-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ten Most Beautiful Actresses of Bengali Cinema". filmsack.jimdo.com (ஆங்கிலம்). 2017-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sumitra Devi – The sedative and gorgeous Indian actress of 1940s to 1960s". My Words & Thoughts (ஆங்கிலம்). 2019-06-18. 2019-07-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Stobok, Author (2017-06-01). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. 2017-07-15 அன்று பார்க்கப்பட்டது.Stobok, Author (1 June 2017). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. Retrieved 15 July 2017.
- ↑ Majumdar, Neepa (2010-10-01). Wanted Cultured Ladies Only!: Female Stardom and Cinema in India, 1930s-1950s. https://books.google.com/books?id=TdM2Ben3alIC&q=sumitra+devi+actress.
- ↑ Bose, Mihir (2008-05-09). Bollywood: A History. https://books.google.com/books?id=hN6mBAAAQBAJ&q=sumitra%20devi%20actress.
- ↑ "Ten Most Beautiful Actresses of Bengali Cinema". filmsack.jimdo.com (ஆங்கிலம்). 2017-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-18 அன்று பார்க்கப்பட்டது."Ten Most Beautiful Actresses of Bengali Cinema" பரணிடப்பட்டது 2017-04-06 at the வந்தவழி இயந்திரம். filmsack.jimdo.com. Retrieved 18 March 2017.
- ↑ "Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema". filmsack.jimdo.com (ஆங்கிலம்). 2018-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 16.0 16.1 16.2 16.3 Stobok, Author (2017-06-01). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. 2017-07-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema". filmsack.jimdo.com (ஆங்கிலம்). 2018-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது."Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema" பரணிடப்பட்டது 2018-01-07 at the வந்தவழி இயந்திரம். filmsack.jimdo.com. Retrieved 16 July 2017.
- ↑ অদম্য ছিল তার আকর্ষণ by Snehashish Chattopadhyay. Bhashyo (2007, November ed.)
வெளி இணைப்புகள்[தொகு]
- ஐஎம்டிபி தளத்தில் சுமித்ரா தேவி (நடிகை) பக்கம்
- Sumitra Devi on Facebook