சுமித்ரா சென்
சுமித்ரா சென் (Sumitra Sen)(7 மார்ச் 1933 - 3 சனவரி 2023) என்பவர் ஓர் இந்திய பெங்காலி பாடகரும் இரவீந்திர சங்கீதத்தின் விரிவுரையாளரும் ஆவார். இவரது பாடும் பாணி தாகூரின் பாடல்களை அசல் குறியீடுகளை இழக்காமல் பிரபலப்படுத்தியது.[1]
தொழில்
[தொகு]1951-ஆம் ஆண்டில், 'கோதர் ரகல் போலே தே ரே' மற்றும் 'பெடோனர் பேடி தோலே' ஆகிய இரண்டு நஸ்ருல்கீதிகளுடன் சென் தனது பாடும் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது பிரபலமான பாடல்களில் பிரதிமா பானர்ஜியின் 'ஆம்தலே ஜமுர் ஜுமுர்' அடங்கும். இவர் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடியுள்ளார். ஆனால் இவர் தனது இரவீந்திர சங்கீதப் பாடல்களுக்காகப் பெயர் பெற்றவர். இது இவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து தந்தது. இவர் 150-க்கும் மேற்பட்ட தாகூர் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். சியாமா, சாப்மோச்சோன், பால்மீகி பிரதிபா, பர்சமங்கல் போன்ற பிரபலமான மேடை நாடகத்திற்காகவும் டோலிவுட்டில் 16 திரைப்படங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.[2] பங்கஜ் முல்லிக்கின் 'மஹிசாசுரமர்தினி'க்காக இவர் எழுதிய 'மகோ டோபோ பைன் சங்கீதோ பிரேமோ லலிதோ' வரலாற்றை உருவாக்கியது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு பிரபல வங்காள மொழி பாடகி ஜெயதி சக்ரவர்த்தி கூறினார். தாகூருடன் தொடர்புடைய இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்டப் பல புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இவர் தொடர்புடையவர்.[3]
இறப்பும் மரபும்
[தொகு]சென் தனது 89ஆவது வயதில், சனவரி 3, 2023 அன்று பாலிகஞ்சில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[4] இவருக்கு இந்திராணி, சிரபோனி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் நன்கு அறியப்பட்ட வங்காளப் பாடகர்களும் ஆவர்.[5] இவர் இறக்கும் போது, சிறிது காலமாக மூச்சுக்குழாய்-நிமோனியா பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.[6] இவருக்குப் பல மாணவர்களும் பின்தொடர்பவர்களும் இருந்தனர்.[7][8] மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.[9]
விருதுகள்
[தொகு]- 2012-ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசாங்கத்தால் சென்னுக்கு சங்கீத மகாசம்மன் விருது வழங்கப்பட்டது. [10] [11]
- வாழ்நாள் பங்களிப்புக்கான சங்கீத நாடக அகாடமி விருது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tribute To Sumitra Sen | Top Sumitra Sen Bengali Songs |Ma Go Tabu Beene |Sakhi Bhabana Kahare Bale (in ஆங்கிலம்), retrieved 2023-12-29
- ↑ 2.0 2.1 "Rabindra Sangeet exponent Sumitra Sen passes away at 89". CNBCTV18 (in ஆங்கிலம்). 2023-01-03. Retrieved 2023-12-29.
- ↑ "Sumitra Sen, Rabindra sangeet legend, passes away". The Week (in ஆங்கிலம்). Retrieved 2023-12-29.
- ↑ "Rabindra Sangeet artist Sumitra Sen passes away at 89". Business Insider. Retrieved 2023-12-29.
- ↑ "Rabindra Sangeet exponent Sumitra Sen passes away at 89". CNBCTV18 (in ஆங்கிலம்). 2023-01-03. Retrieved 2024-01-01.
- ↑ PTI (2023-01-03). "Legendary Singer Sumitra Sen Passes Away At 89". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2023-12-29.
- ↑ "Eminent Rabindra Sangeet exponent Sumitra Sen dies". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-03. Retrieved 2023-12-29.
- ↑ "Legendary singer Sumitra Sen passes away at 89". TimesNow (in ஆங்கிலம்). 2023-01-03. Retrieved 2023-12-29.
- ↑ IANS (2023-01-03). "Acclaimed Rabindra Sangeet artist Sumitra Sen passes away". National Herald (in ஆங்கிலம்). Retrieved 2023-12-29.
- ↑ "Sumitra Sen: 5 Points On Rabindra Sangeet Exponent". NDTV.com. Retrieved 2023-12-29.
- ↑ "Rabindrasangeet exponent Sumitra Sen passes away at 89". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-12-29.