சுமித்ரா குல்கர்னி
சுமித்ரா குல்கர்னி | |
|---|---|
| மாநிலங்களவை | |
| பதவியில் 10 ஏப்ரல் 1972 – 9 ஏப்ரல் 1978 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சுமித்ரா காந்தி 5 அக்டோபர் 1929 அகமதாபாது, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1972-1977), ஜனநாயகத்திற்கான காங்கிரசு (1977), ஜனதா கட்சி (1978) |
| துணைவர் | கஜானனன் ரகுநாத் குல்கர்னி |
| உறவுகள் | மகாத்மா காந்தி குடும்பத்தினர் |
| பிள்ளைகள் | ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ணா , சோனாலி |
| முன்னாள் மாணவர் | மகளிர் கல்லூரி, பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
சுமித்ரா குல்கர்னி (Sumitra Kulkarni) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மகாத்மா காந்தியின் குடும்பத்தில் பிறந்த இவர் முதுகலைப் பட்டம் படித்து, அரசியலில் சேருவதற்கு முன்பு இந்திய ஆட்சிப் பணி அலுவலராகப் பணியாற்றினார். இவர் 1972 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]குல்கர்னி 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 அன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் பிறந்தார்.[1][2] இவர் ராம்தாஸ் காந்தியின் மகளும் ,மகாத்மா காந்தியின் பேத்தியும் ஆவார்.[3] இவர் காந்தியின் ஆசிரமத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார், மேலும் வர்தா அருகிலுள்ள சேவாகிராமில் வளர்ந்தார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை மற்றும் நவீன உலகின் தூதாண்மையியலில் நிபுணத்துவத்துடன் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[4][5] இவர் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் இந்திய ஆட்சிப் பணி அலுவலராகவும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியராகவும் இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர இந்திரா காந்தியால் வற்புறுத்தப்பட்டார்.[6][7] 1972 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர். பதவியிலிருந்து விலகிய இவர், குசராத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9] அவசரநிலையின் போது இவர் இந்திய தேசிய காங்கிரசின் மீது ஏமாற்றமடைந்தார், இதனால் இவர் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 அன்று ஜனநாயகத்திற்கான காங்கிரசுக்கு மாறினார்.[10][11][12] இக்கட்சி பின்னர் ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது.[13][14] இவர் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 முதல் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[9]
இவர் அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார் (2000-2002).[15] தேர்தலின் போது இவர் மது எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.[16]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]குல்கர்னி ஐஐஎம் அகமதாபாத் டீன் கஜானன் ரகுநாத் குல்கர்னியை மணந்தார். இவர்களுக்கு இரட்டை மகன்களான ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரும் ஒரு மகள் சோனாலியும் உள்ளனர்.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019 (PDF). RAJYA SABHA SECRETARIAT, NEW DELHI. 2019. p. 244.
- ↑ "Excuse me, if I take Narendra Modi's side: Mahatma Gandhi's granddaughter". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2024-01-17.
- ↑ Kalappa, Bansy (2019-06-08). "Godse talk won't dent Gandhi's image: Mahatma's granddaughter Sumitra". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-01-17.
- ↑ Kaura, Ajīta (1976). Directory of Indian Women Today, 1976 (in ஆங்கிலம்). India International Publications. p. 255.
- ↑ Kool, V. K.; Agrawal, Rita (2020-11-06). Gandhi and the Psychology of Nonviolence, Volume 1: Scientific Roots and Development (in ஆங்கிலம்). Springer Nature. pp. 64–66. ISBN 978-3-030-56865-8.
- ↑ Singh, Shankar Dayal (1978). Emergency, Fact and Fiction (in ஆங்கிலம்). Delhi Printers Prakashan. pp. 51, 59.
- 1 2 Kalhan, Promilla (1977). Black Wednesday: Power Politics, Emergency, and Elections (in ஆங்கிலம்). Sterling Publishers. p. 37.
- ↑ Gandhi, Indira; Gandhi, Sonia, eds. (2004). Two Alone, Two Together: Letters Between Indira Gandhi and Jawaharlal Nehru 1922-1964 (in ஆங்கிலம்). Penguin Books India. p. 516. ISBN 978-0-14-303245-8.
- 1 2 WOMEN MEMBERS OF RAJYA SABRA (PDF). RAJYA SABHA SECRETARIAT, NEW DELHI. 2003. p. 146.
- ↑ "Mahatma Gandhi's descendants carry forward a difficult legacy". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-01-17.
- ↑ Turadagi, Dr Basavaraj M. (2022-01-06). BABU JAGJIVAN RAM A story of struggle (in ஆங்கிலம்). Ashok Yakkaldevi. p. 157. ISBN 978-1-716-14756-2.
- ↑ Translations on South and East Asia (in ஆங்கிலம்). U. S. Joint Publications Research Service. 1977. p. 13.
- ↑ Pal, Kushal (2008). "Dynamics of Party System and Formation of Coalition Government in India". The Indian Journal of Political Science 69 (2): 333. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5510. https://www.jstor.org/stable/41856420.
- ↑ Lieten, Georges Kristoffel (1980). "Janata as a Continuity of the System". Social Scientist 9 (5/6): 14–35. doi:10.2307/3520400. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-0293. https://www.jstor.org/stable/3520400.
- ↑ "Mahatma's kin have little use for politics today". Hindustan Times (in ஆங்கிலம்). 2004-04-02. Retrieved 2024-01-17.
- ↑ Ravikumar, Aruna (2023-08-24). There I Was! : Media Musings (in ஆங்கிலம்). Prabhat Prakashan. ISBN 978-93-5488-674-4.
- ↑ Sreenivasa Raghavan, T. S. (2010-10-08). "Gandhi kin to tie the knot with Microsoft boss". Bangalore Mirror. Retrieved 2024-01-17.