சுமிதா கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமிதா கோஷ்
Sumita Ghose (cropped).jpg
நாரி சக்தி விருது பெறும் சுமிதா கோஷ்
பிறப்புகொல்கத்தா
தேசியம் இந்தியா
கல்விமும்பை
வாழ்க்கைத்
துணை
சஞய் கோஷ்

சுமிதா கோஷ் (Sumita Ghosh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழில்முனைவோர் ஆவார். இவர் "ரங்சூத்ரா" என்ற கூட்டு நிறுவனத்தைத் தொடங்கி அதற்காக இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து நா சக்தி விருதை வென்றார். இவர் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான கைவினைஞர்கள் இணை உரிமையாளராக இருக்கிறார்கள். மேலும், நிறுவனத்தின் மூலம் அவர்கள் தங்கள் பொருட்களை ஐ.கே.இ.ஏ போன்ற உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்கள்.

வாழ்க்கை[தொகு]

சுமிதா கொல்கத்தாவில் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதற்கு முன்பு மும்பையில் பட்டம் பெற்றார். இவர் சஞ்சோய் கோஷ் என்பவரை மணந்தார். இவர்கள் கிராமப்புற சமூகங்களுடன் இணைந்து ராஜஸ்தானில் சுகாதார கல்வியை மேம்படுத்த முயன்றனர். இவரது கணவர் அசாமில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியால் கடத்தப்பட்டார். அவர் திரும்பி வரவில்லை. [1]

பணிகள்[தொகு]

பல ஆண்டுகளாக இவர் இந்தியாவின் கிராமப்புறங்களில் பணியாற்றினார். அவர்களின் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முயன்றார். [2] 2007ஆம் ஆண்டில் இவர், கிராமப்புற கைவினைஞர்கள் சிறந்த ஊதியம் பெறும் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு வணிகத்தை நிறுவ முடிவு செய்தார். இதற்கான மூலதனம் இவரிடம் இல்லாதால் அவர்களிடமே நிறுவனத்திற்கான பணத்தைப் பெற்று அவர்களையும் நிறுவனத்தில் பங்குதாராக்கி "ரங்கசூத்ரா" என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவினார். [3]

விருதுகள்[தொகு]

இவரது இப்பணியை கௌரவிக்கும் வகையில் 2016இல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று நாரி சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டு [4] புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டது. இவருடன் சேர்த்து மேலும் பதினான்கு பெண்கள் மற்றும் ஏழு நிறுவனங்களும் அன்று கௌரவிக்கப்பட்டன.[5] அந்த நேரத்தில் ரங்சூத்ராவில் 2,000 கைவினைஞர்கள் முதலீட்டாளர்களாக இருந்தனர். [2]

விற்பனை[தொகு]

2020 ஆம் ஆண்டில் தாய்லாந்து, உருமேனியா, ஜோர்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சமூக தொழில்முனைவோருடன் இணைந்து தங்கள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அதன் தாவரவியல் சார்ந்த விற்பனை வரம்பை ஐ.கே.இ.ஏ அறிமுகப்படுத்தியது. இவர் அந்நிறுவனத்தின் முக்கிய விற்பனையாளர்களில் ஒருவராக இருந்தார். தாவரவியல் கருப்பொருளுடன் பொருந்தக்கூடிய நிலையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் குஷன் அட்டைகளை ரங்சூத்ரா வழங்கி வருகிறது. இவர்களும் ஐ.கே.இ.ஏ வும் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பிற கிராமப்புற கைவினைஞர்களுக்கான வேலைகளை உருவாக்கி வருகின்றனர். [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிதா_கோஷ்&oldid=3130724" இருந்து மீள்விக்கப்பட்டது