சுமிதா இராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமிதா இராஜன்
இணையத்தளம்http://www.smitharajan.com/

சுமிதா இராஜன் (Smitha Rajan) (பிறப்பு 1969) கேரளாவைச் சேர்ந்த ஒரு மோகினியாட்டம் கலைஞர் ஆவார், இவர், புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடன நடன இணைகளான பத்மசிறீ கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோரின் பேத்தியாவார். இவரது தாயார் சிறீதேவி ராஜன் ஒரு பிரபலமான மோகினியாட்டம் குரு மற்றும் சுமிதாவின் ஆசிரியரும் ஆவார். இவரது தந்தை மறைந்த டி.ஆர்.ராஜப்பன் ஆவார்.

சுய விவரம்[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

சுமிதா இராஜன் கொச்சியில் இருந்து திரிபுனிதுராவில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் இல்லத்தில் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். நடனம் மற்றும் இசையின் சரியான சூழ்நிலையால் வளர்ந்தமையால் சுமிதாவின் இளம் வயதில் நடனம் கற்றுக்கொள்வது அவரது தாய்மொழியில் பேசக் கற்றுக்கொள்வது போலவே இயல்பான ஒன்றாக அமைந்தது. சுமிதாவின் அத்தை, காலா விஜயன் (மோகினியாட்டத்திற்கான சங்க நாடக அகாதமி விருதைப் பெற்றவர்) இளம் சுமிதாவின் திறமையைப் பார்த்த முதல் நபர் ஆவார். திரிபுனிதுராவில் உள்ள தனது பெரிய பெற்றோரின் நிறுவனமான கேரள கலாலயத்தில் ஒரு பயிற்சி வகுப்பின் போது, இவரது அத்தை இளம் வயதிலேயே, சுமிதா மூத்த மாணவர்களுடன் ஒரு முழு சோல்கெட்டு பயிற்சி செய்யும் (ஒரு பொதுவான மோகினியாட்டம் திறனாய்வில் முதல் உருப்படி) நிகழ்ச்சியைக் கண்டார். அப்போதிருந்து குரு கலா விஜயன் இவருக்கு பரதநாட்டியத்தில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார், சுமிதா தனது 4வது வயதில் பரதநாட்டியத்தில் தனது அரங்கேற்றத்தை செய்தார்.

இவரது தாயார் குரு சிறீதேவி இராஜன், சுமிதாவுக்கு மோகினியாட்டத்தில் தனது ஆரம்ப பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். மேலும் சுமிதா தனது 6ஆம் வயதில் மோகினியாட்டத்தில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். பின்னர் இவர் , மோகினியாட்டத்தில் பரவலாக அறியபட்ட இவரின் பாட்டியிடமிருந்து மோகினியாட்டத்தில் தேர்ச்சி பெற்றார். இவரது பெரிய தந்தை குரு கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் இவருக்கு கதகளியை கற்றுக் கொடுத்தார்; மற்றும் அவரது முக அபினயாவை (முகபாவனைகள்) நன்றாக வடிவமைத்தார். [1] பேராசிரியர் கல்யாணசுந்தரத்தின் கீழ் சுமிதா பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சியும் பெற்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் 14 வயதில் கேரள கலாலயம் என்ற தாய் நிறுவனத்தில் கற்பித்த இவர் 1990 வரை அந்தப் பணியைத் தொடர்ந்தார்.

தொழில்[தொகு]

இவர் தனது 12வது வயதில் தொழில்முறை நடனக் கலைஞராக மாறினார். 1980 ஆம் ஆண்டில் மோகினியாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தனது பெரியம்மா, இவரது தாய் மற்றும் இவரது அத்தை ஆகியோருடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான இடங்களுக்குச் சென்றார். 1979 முதல் 1992 வரை கேரள கலாலயத்தின் முன்னணி நடிகையாக இருந்தார். இன்றைய பல மோகினியாட்டம் கலைஞர்களுக்கு மோகினியாட்டத்தை கற்பிப்பதில் இவர் தனது தாய், பாட்டி மற்றும் அவரது அத்தைக்கு உதவியுள்ளார். இவர் தனது பாட்டியின் போதனைகளின் முழுமையான சாராம்சமாக மோகினியாட்டம் துறையில் அங்கீகரிக்கப்படுகிறார், மேலும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா கலாமண்டலத்தில் உள்ள போதனைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டு பிரபலப்படுத்திய மோகினியாட்டம் பாணியின் முதன்மை மாணவராகவும், நடிகராகவும் கருதப்படுகிறார். [2]

நடன பயிற்சி நிறுவனம்[தொகு]

இன்று, சுமிதா தனது குடும்பத்தினருடன் மிசௌரியின் செயின்ட் லூயிஸில் வசித்து வருகிறார், குரு சிறீதேவி இராஜன் கொச்சியில் தொடங்கிய கேரள கலாலய நிறுவனத்தின் ஒரு கிளையாக நிருத்யக்ஷேத்ரா "டெம்பிள் ஆப் டான்ஸ்" [3] என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிதா_இராஜன்&oldid=2929865" இருந்து மீள்விக்கப்பட்டது