சுமா சுதீந்தரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் சுமா சுதீந்தரா
பிறப்புஇந்தியா
பிறப்பிடம்கர்நாடகா, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைக்கலைஞர், வீணைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரஸ்வதி வீணை
இணையதளம்www.sumasudhindra.co.in

சுமா சுதீந்திரா (Suma Sudhindra) இவர் ஓர் கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் வீணையில் நிபுணரும் ஆவார். மேலும், இவர் ஒரு இசை நிகழ்ச்சியை நிகழ்த்துபவராகவும், ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளரும் மற்றும் நிர்வாகியாகவும் இருக்கிறார். 2001 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான, ராஜ்யோத்சவ விருது இவருக்கு வழங்கப்பட்டது. முனைவர் சுமா சுதீந்திரா தனது தலைமுறை இசைக்கலைஞர்களில் வீணையை முன்னிலைப்படுத்தியவர் ஆவார்.

ஆரம்ப நாட்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு வித்வான் இராஜா ராவ் மற்றும் வித்வான் சிட்டி பாபு ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரது கணவர் ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [1] இவர் ஒரு தீவிர பொன்சாய் சேகரிப்பாளருமாவார். [2]

தொழில்[தொகு]

வீணையின் மெல்லிசை ஒலிகளுக்கு பெயர் பெற்ற சிட்டிபாபு பாணி இவரிடம் உள்ளது. இவர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பரவலாக சுற்றுப்பயணம் செய்து பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர் பல ஆண்டுகளாக பல வீணைக் குழுக்களுக்கு தலைமை தாங்கி வருகிறார். [3]

தரங்கிணி வீணை[தொகு]

சுமா "தரங்கிணி வீணை" என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது வீணையின் ஒரு சிறிய பதிப்பாகும். தரங்கிணி வீணை என்பது இந்தியாவின் மிகப் பழமையான சரம் கருவியாகும். இது கற்றல் மற்றும் கலைகளின் தெய்வமான சரசுவதியுடன் தொடர்புடையது. வீணை இசைக்கருவிகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. வேத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவிகளின் முதன்மையான மூன்று கருவிகளில் இதுவும் ஒன்று. மற்றவை புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் என்பதாகும். பழங்காலத்திலிருந்தே, தரங்கிணி வீணை தெய்வீக கருவியாக வர்ணிக்கப்படுகிறது. வீணை வாசிப்பது யோகமாக கருதப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற பெரிய காவியங்களும் வீணையைப் பற்றி பேசுகின்றன.

கருநாடக இசை-ஜாஸ்[தொகு]

இவர் பல ஆண்டுகளாக இடச்சு ஜாஸ் குழுவான எசுபினிபெக்சுடன் பல இணைவு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [4]

பிற முயற்சிகள்[தொகு]

சுமா இந்திய இசை அனுபவ மையத்தின் இயக்குனர் ஆவார். இந்த மையம் ஒரு புதிய வகையான அருங்காட்சியகமாகும். [5] குச்சிபுடி நடனக் கலைஞர் வீணா மூர்த்தி விஜயுடன் இணைந்து "கலைஞர்களின் உள்நோக்க இயக்கம்" என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இம்மையம் 2007 முதல் பெங்களூர் சர்வதேச கலை விழாவை ஏற்பாடு செய்கிறது. பெங்களூர் சர்வதேச கலை விழா என்பது கலைஞர்களுக்கான ஒரு கலாச்சார தளமாகும். [6] 2017இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பல முறை தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். பால்டிமோர் மேயர் இவரது இசை நிகழ்ச்சியை கேட்டபின் இவருக்கு ஒரு கெளரவ குடியுரிமையை வழங்கினார். நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இவரது இசையை பல்வேறு தலைப்புகளுடன் கௌரவிப்பதன் மூலம் தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

விருதுகள் மற்றும் வாழ்த்துக்கள்[தொகு]

2001 இல் கர்நாடக இரண்டாவது மிக உயர்ந்த விருதான, ராஜ்யோத்சவ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [7] தமிழக அரசின் கலைமணி விருது பெற்றுள்ளார். கர்நாடக கணகல பரிஷத்தின் கானகலாசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. தியாகராஜ ஞானசபாவிலிருந்து "வைனிகா கலாபூசண்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandaraju, Aruna (30 May 2009). "Fusion is not just mere confusion". Deccan Herald. http://www.deccanherald.com/content/5139/fusion-not-just-mere-confusion.html. பார்த்த நாள்: 17 March 2015. 
  2. "Small is beautiful". Deccan Herald. 25 January 2013. http://www.deccanherald.com/content/307425/small-beautiful.html. பார்த்த நாள்: 17 March 2015. 
  3. Ramkumar, Madhavi (10 October 2013). "Synchronised strings". Bangalore. http://www.thehindu.com/features/friday-review/music/synchronised-strings/article5220948.ece. பார்த்த நாள்: 17 March 2015. 
  4. Mazumdar, Subhra (4 March 2012). "A different melody altogether". Deccan Herald. http://www.deccanherald.com/content/231792/a-different-melody-altogether.html. பார்த்த நாள்: 17 March 2015. 
  5. Madhukar, Jayanthi (27 October 2013). "Touch, feel and make music". Bangalore mirror. http://www.bangaloremirror.com/columns/sunday-read/Touch-feel-and-make-music/articleshow/24764071.cms. பார்த்த நாள்: 17 March 2015. 
  6. "City gears up for arts fest". 19 September 2013. http://www.thehindu.com/news/cities/bangalore/city-gears-up-for-arts-fest/article5142743.ece. பார்த்த நாள்: 17 March 2015. 
  7. "Rajyotsava awards for ace barber, IAS topper". The Times of India. Bangalore. 30 Oct 2001. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Rajyotsava-awards-for-ace-barber-IAS-topper/articleshow/559537427.cms. பார்த்த நாள்: 17 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமா_சுதீந்தரா&oldid=2917072" இலிருந்து மீள்விக்கப்பட்டது