சுமால் சேஞ்ச் - வொய் பிசினஸ் வோன்ட் சேவ் த வேர்ல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமால் சேஞ்ச்:வொய் பிசினஸ் வோன்ட் சேவ் த வேர்ல்ட்
நூலாசிரியர்மைக்கேல் எட்வர்ட்ஸ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைவணிகம் மற்றும் பொருளியல்
வெளியீட்டாளர்பெர்ரெட்-கோகெலெர் பப்ளிஷர்ஸ் (Berrett-Koehler Publishers)
வெளியிடப்பட்ட நாள்
2010
பக்கங்கள்124
ISBN1605093793, 9781605093796

சுமால் சேஞ்ச்: வொய் பிசினஸ் வோன்ட் சேவ் த வேர்ல்ட் என்னும் நூலை மைக்கேல் எட்வர்ட் எழுதினார். இவர் ஃபோர்ட் நிறுவன அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர். சமூக ஆர்வலராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆசிரியரின் அனுபவங்களின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் தன்னார்வ செயல்பாடுகள், மக்கள் மத்தியில் எதிர்பார்க்கும் விளைவினை ஏற்படுத்தத் தவறுவதையும், அந்நிறுவனங்களின் சமுதாய நலக் கண்ணோட்டங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இன்மையையும் குறிப்பிடும் நூல். தனிமனித மக்களின் மன மாற்றங்களால் சரியான தீர்வு ஏற்படும் என்றும், இதற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் தீர்வு முறைகள் கேடு செய்யும் சூழல் நிலவுவதையும் இந்நூல் சுட்டுகிறது.[1]

ஆசிரியர் குறிப்பு[தொகு]

இந் நூல் ஆசிரியர் மைக்கேல் எட்வர்ட் ஜாம்பியா, கொலம்பியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் வசித்தும் பணியாற்றியும் இருப்பவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். உலக வங்கியிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளிலும் பணியாற்றியவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]