சுமாத்திரா ஒராங்குட்டான்
சுமாத்திரா ஒராங்குட்டான் | |
---|---|
லைப்சிக் மிருககாட்சி சாலையில் ஆண் | |
செருமன் முனிச் மிருககாட்சி சாலையில் குட்டியுடன் பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோமினிடே
|
பேரினம்: | பொங்கோ அபேலி
|
இனம்: | பெ. அபேலி
|
இருசொற் பெயரீடு | |
பொங்கோ லெசன், 1827[3] | |
இந்தோனேசியாவில் பரவல் |
சுமாத்திரா ஒராங்குட்டான் (Sumatran orangutan) என்பது ஒராங்குட்டானின் மூன்று சிற்றினங்களில் ஒன்றாகும். பொங்கோ பேரினத்தின் கீழ் இது பொங்கோ அபேலி எனப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் மட்டுமே காணப்படுகிறது. இது பாோ்னிய ஒராங்குட்டானை விட அரிதாகக் காணப்பட்டாலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தபானுலி ஒராங்குட்டானைவிடப் பொதுவானது. இதன் பொதுவான பெயரானது இரண்டு வேறுபட்ட உள்ளூர் மொழியான மலாய் சொற்களிலிருந்து உருவானது. "ஓராங்" ("மக்கள்" அல்லது "நபர்") மற்றும் "குட்டன்" ("காடுகள்") என்பவை இச்சொற்களாகும். இவற்றிலிருந்து 'காட்டு மனிதன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
விளக்கம்
[தொகு]சுமாத்திரா ஆண் ஒராங்குட்டான் 1.4 மீ (4.6 அடி) உயரமும், 90 கிலோ (200 பவுண்டு) எடையும் காெண்டது. ஆணைவிடப் பெண் ஒராங்குட்டான் சராசரியாக 90 செமீ (3.0 அடி) மற்றும் 45 கிலோ (99 பவுண்டு) எடையுடன் சிறியது. பாோ்னிய சிற்றினத்துடன் ஒப்பிடும்போது, சுமாத்திர ஒராங்குட்டான் மெல்லிய மற்றும் நீண்ட முகத்தினையுடையது. இவற்றின் தலைமுடி மிகவும் நீளமாகவும், செந்நிறத்திலும் இருக்கும்.
நடத்தையும் சூழலும்
[தொகு]சுமாத்திரா ஒராங்குட்டானைப் பாோ்னிய ஒராங்குட்டானுடன் ஒப்பிடுகையில், சுமாத்திரா ஒராங்குட்டான் பழம் உண்ணியாகவும், பூச்சி உண்ணியாகவும் இருக்கின்றன. இவற்றுக்கு விருப்பமான பழங்கள் அத்தியும் பலாப்பழமும் ஆகும். மேலும் இது பறவைகளின் முட்டைகள் மற்றும் சிறிய முதுகெலும்பிகள் ஆகியவற்றையும் உண்கின்றன. இவை மரங்களின் மேலிருந்து உண்பதற்குச் சிறிது நேரத்தையே செலவழிக்கின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ Singleton, I.; Wich , S.A.; Nowak, M.; Usher, G.; Utami-Atmoko, S.S. (2023). "Pongo abelii". IUCN Red List of Threatened Species 2023: e.T121097935A247631244. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T121097935A247631244.en. https://www.iucnredlist.org/species/121097935/247631244.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Lesson, René-Primevère (1827). Manuel de mammalogie ou Histoire naturelle des mammifères (in பிரெஞ்சு). Paris: Roret, Libraire. p. 32.