சுமன் மகதோ
சுமன் மகதோ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | ஜம்ஷேத்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜம்சேத்பூர், கிழக்கு சிங்க்பூம் | 4 திசம்பர் 1964
அரசியல் கட்சி | சார்க்கண்டு முக்தி மோர்ச்சா |
துணைவர் | சுனில் குமார் மகதோ |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம்(s) | சேரைகிழா கர்சாவான், சார்க்கண்டு]] |
As of 17 பிபரவரி, 2012 |
சுமன் மகதோ (Suman Mahato; பிறப்பு 4 திசம்பர் 1964) என்பவர் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் சார்க்கண்டு முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினர் ஆவார். இக்கட்சியின் சார்பில் சார்க்கண்டின் ஜம்சேத்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
சுமன் மகதோவின் கணவரும் அப்போதைய மக்களவை உறுப்பினருமான சுனில் குமார் மகதோ, இந்து பண்டிகையான ஹோலி பண்டிகையைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டபோது, மார்ச் 4,2007 அன்று கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காட்சிலாவுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான மாவோயிச கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.[1] இவர் 2007 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tributes paid to slain JMM leader Sunil Mahato". The Avenue Mail. 4 March 2015. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4231.
- ↑ "Ex-MPs add she might to LS fight". The Telegraph. 12 April 2014. https://www.telegraphindia.com/1140412/jsp/jharkhand/story_18182208.jsp.