சுமந்திரன்
Appearance
இராமாயணக் காப்பிய மாந்தரும், அயோத்தியைத் தலைநகரமாகக் கொண்ட கோசல நாட்டு மன்னர் தசரதனின் நம்பிக்கைக்குரிய மதிநலம் மிக்க முதன்மை அமைச்சரும், தேரோட்டியும் ஆவார்.[1] தசரதனின் குழந்தை பேற்றுக்காக, முனிவர் கலைக்கோட்டு முனிவர் தலைமையில் அஸ்வமேத யாகத்தைச் செய்ய சுமந்திரன் மன்னர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார்.
மேலும் அங்க தேச மன்னரானரோபாதரின் மகளான சாந்தாவை மணந்த கலைக்கோட்டு முனிவர் எனும் ரிஷ்யசிருங்கரை அங்க தேசத்திலிருந்து அயோத்திக்கு அழைத்து வந்தார் என இராமாயணத்தின் பால காண்டம் அத்தியாயம் 9ல் கூறப்பட்டுள்ளது.[2]
இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதற்கு, இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் முதலானவர்களை கங்கைக் கரை வரை விட்டுச் சென்றவர். கங்கை ஆற்றை கடக்க இராமருக்கு குகன் படகோட்டினார்.
மேற்கோள்கள்
[தொகு]