சுமதி சேத்ரமடே
தோற்றம்
சுமதி சேத்ரமடே (Sumati Kshetramade)(7 மார்ச் 1913 - 1997) மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி எழுத்தாளர்[1] ஆவார்.[2][3] இவர் மருத்துவராயினும் எழுத்தாளராக நன்கு அறியப்படுகிறார். இவர் மராத்தி, குசராத்தி மொழிகளில் அதிகமாக எழுதிவருபவர் ஆவார்.
கல்வி
[தொகு]1935-இல் மருத்துக் கல்வியினை முடித்த சுமதி சேகாதாடே பரோடாவில் வசித்து வந்தார். பின்னர் 1945-இல் மருத்துவ மேல் கல்விக்காக இங்கிலாந்துக்குச் சென்று, பின்னர் கோலாப்பூரில் குடியேறி மருத்துவம் செய்தார். இவரது முதல் நாவல், காந்த்பரி ஆதார் மருத்துவமனை சூழலை அடிப்படையாகக் கொண்டது. இவரது நாவல்களின் முக்கிய கருப்பொருள் பெண்களைச் சுரண்டுதல் குறித்ததாகும்.[4]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]நாவல்கள்
[தொகு]- சுராவணதாரா (1983)
- பிரதிபாதா (1982)
- மகாமாலி படாவா (1979)
- ஆச்ஆத் மேக் (1976)
- ஷர்வாரி ஷர்வாரி
- யுகந்தாரா
- அபாசு
- மகாசுவேதா
- அனுகர்
- வ்ருண்டா
- யாத்னியாசேனி
- சாம்பராச்சி சிங்கே
- ஜீவன்-சுவப்னா[5]
- ஸ்ரீ கிருஷ்ணர்
- சத்யப்ரியா காந்தாரி
- அர்ப்பணிப்பு
- சம்பராச்சி சிங்கே
- சிந்துதுர்க்
- எல்லைக் கோடு
- சுமதிகந்தா
- சேலா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajan, P. K. (1989). The Growth of the novel in India, 1950-1980. Abhinav Publications. p. 124. ISBN 978-81-7017-259-8.
- ↑ Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 639. ISBN 8126008733.
- ↑ "Marathi writer Kshetramade dead". The India Network Foundation. Retrieved 27 April 2015.
- ↑ Bande, Usha; Atma Ram (2003). Woman in Indian short stories: feminist perspective. Rawat Publications. p. 75. ISBN 978-81-7033-778-2.
- ↑ Caṭṭopādhyāẏa, Śaratcandra; Manik Mukhopadhyay; Satyabrata Toy (1977). The Golden book of Saratchandra. All Bengal Sarat Centenary Committee. p. 102. கணினி நூலகம் 4513666.