சுப. சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப. சதாசிவம் (பிறப்பு: டிசம்பர் 9, 1930) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிறந்த இவர், முதுநிலை மருத்துவம், முனைவர் பட்டங்களைப் பெற்று மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மூலிகை மருந்துகள், விஞ்ஞான நோக்கில் நோய் தீர்க்கும் மூலிகைகள் உட்பட ஆறு நூல்களை எழுதியிருக்கிறார். இவர் தினமணி, தினமலர், தினகரன் உட்பட பல நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் இவர் சித்த மருத்துவக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சித்த மருத்துவச் சுடர் எனும் பட்டம் பெற்ற இவர் எழுதிய "அனுபோக வைத்தியத் திரட்டு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப._சதாசிவம்&oldid=3614086" இருந்து மீள்விக்கப்பட்டது