சுப்ரபாரதிமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்ரபாரதிமணியன்
பிறப்புஆர்.பி.சுப்ரமணியன்
25 அக்டோபர் 1955
திருப்பூர்
இருப்பிடம்திருப்பூர்
தேசியம்இந்தியர்
கல்விஎம்.எஸ். ஸி (கணிதம்)
பணியகம்பொறியாளர் தொலைபேசித்தொடர்புத் துறை
வலைத்தளம்
http://rpsubrabharathimanian.blogspot.de/

சுப்ரபாரதிமணியன் (ஆர்.பி.சுப்ரமணியன், 25 அக்டோபர் 1955, திருப்பூர்) தமிழக தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடாத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

முதல் சிறுகதை: சுதந்திர வீதிகள்( விழிப்பு –இலக்கிய இதழ்) 1978

வெளிவந்த நூல்கள்[தொகு]

சிறுகதை நூல்கள்[தொகு]

 • அப்பா (1987, முதல் சிறுகதைத்தொகுப்பு)
 • இருள் இசை – 1995
 • ஆழம் (1997)
 • வழித்துணைகள் (1999)
 • தொலைந்து போன கோப்புகள் - 2004
 • ஓலைக்கீற்று – 2007
 • கூண்டும் வெளியும் (2009)
 • சுப்ரபாரதிமணியனின் கதைகள் (2011, 1200 பக்கங்கள், 156 சிறுகதைகள், காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு)
 • வேட்டை (2011,உயிர்மை)
 • மாறுதடம்

கவிதைத் தொகுப்பு[தொகு]

 • நீர்த்துளி (2011, காவ்யா)

கட்டுரைகள்[தொகு]

 • மண் புதிது – (1996, பயணக்கட்டுரைகள், ஐரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம், காவ்யா)
 • தண்ணீர் யுத்தம் (2008, உயிர்மை, சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
 • படைப்பு மனம் (2009, அகரம், இலக்கிய கட்டுரைகள்)
 • மனக்குகை ஓவியங்கள் (2010)
 • மேகவெடிப்பு (2014)
 • சூழல் அறம் (2014)
 • மூன்றாம் உலகப்போர் (2015)

திரைப்படக்கட்டுரைகள்[தொகு]

 • திரைவெளி (2008, அமிர்தா)
 • நாளை மற்றொரு நாளல்ல (2010, உயிர்மை)

குறுநாவல்கள்[தொகு]

 • நகரம் (1988, குமரி)
 • காற்றில் அலையும் சிறகு (2005)
 • வேறிடம் (2012, என்சிபிஎச்)

நாவல்கள்[தொகு]

 • மற்றும் சிலர் 1987
 • சுடுமணல் கட்டுரை வடிவம் 1990 (மலையாளத்திலும் வெளியானது)
 • சாயத்திரை 1998 (சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியானது)
 • பிணங்களின் முகங்கள் 2003 ( கோவை கஸ்தூரி சீனிவாசன் பரிசு பெற்றது, ஆங்கிலத்திலும் வெளியானது)
 • சமையலறைக் கலயங்கள் 2005
 • தேனீர் இடைவேளை 2006 (ஆங்கிலத்திலும் வெளியானது)
 • ஓடும் நதி 2007 (என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது)
 • அறிவிப்பு (2001)
 • மாலு 2012 (உயிர்மை)
 • நீர்த்துளி 2011 (ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு )
 • தறிநாடா (என்சிபிஎச்)
 • சப்பரம் (காவ்யா, ராஜபாளையம் மணிமேகலை மன்றம், கலை இலக்கியப் பெரும்னறம் இரண்டு விருதுகள் பெற்றது)
 • புத்து மண் – உயிர்மை பதிப்பகம், சென்னை

தொகுப்பு நூல்கள்[தொகு]

 • அசோகமித்ரன் 77 (2010, அசோகமித்ரன் பற்றிய கட்டுரைகள், அம்ருதா பதிப்பகம்)
 • தமிழ் மொழிக்கு நாடிலை (அ.முத்துலிங்கம் பேட்டிகள், கவின்கலை பதிப்பகம், சென்னை)
 • அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (அய்ந்திணை பதிப்பகம், சென்னை)
 • சி.சு.செல்லப்பா எழுத்துக்காரன் (காவ்யா)
 • நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் (2012 என்சிபிஎச்)
 • படைப்பும், பகிர்வும் (2006, காவ்யா)
 • தற்கால மலையாளக் கவிதைகள் (1994)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • பின்னலின் பின்னல் (2008, சாலிடாரிட்ட் அமைப்பு, திருப்பூர் பின்னாலாடை தொழில் பற்றிய நூல், ஆங்கிலத்திலிருந்து)
 • உயில் மற்றும் பிற கதைகள் (2012, சாகித்ய அகாதமி, ஜெ.பி.தாஸின் ஒரியக்கதைகள், ஆங்கிலத்திலிருந்து)
 • மண்ணின் பாடல்கள் (2014, சாகித்ய அகாதமி, வடகிழக்கு இந்தியக் கதைகள்)

ஆய்வு நூல்கள்[தொகு]

 • பின்னலினால் பிணைக்கப்பட்டது – 2006

குறும்படங்கள்[தொகு]

 • சோத்துப்பொட்டலம் (2005, சேவ், திருப்பூர்)
 • திருவிழா (2004, முத்தமிழ்ச் சங்கம், திருப்பூர்)
 • சுமங்கலி (2009, திருப்பூர் மக்கள் அமைப்பு)

நாடகம்[தொகு]

 • மணல் வீடு (2005, மக்கள்)

விருதுகள்[தொகு]

 • கதா விருது (1994 - சிறந்த சிறுகதையாளருக்கானது, இந்திய ஜனாதிபதி வழங்கியது)
 • தமிழக அரசு சிறந்தநாவல் பரிசு (சாயத்திரை நாவலுக்காக)
 • கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது (2011 - சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலுக்காக)[1]
 • திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சிறந்த நூல்கள் பரிசுகள்
 • இலக்கியச் சிந்தனைப் பரிசு
 • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
 • கோவை லில்லி தேவசிகாமணி விருது (சிறந்த சிறுகதையாளருக்காக)
 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது (சிறந்த சிறுகதையாளருக்காக)
 • ஏர் இந்தியா – குமுதம் இலக்கியப் போட்டிப் பரிசு (நகரம் குறுநாவலுக்காக)
 • திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் கலைமாமணி விருது
 • கி.ரா.வின் கரிசில் விருது (கனவு சிற்றிதழுக்காக)
 • கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை பரிசு (பிணங்களின் முகங்கள் நாவலுக்காக -.ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டது.)[2]
 • என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது (ஓடும் நதி நாவலுக்காக)
 • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (நீர்த்துளி நாவலுக்காக)
 • சேலம் எழுத்துக்களம் விருது (கனவு சிற்றிதழுக்காக - 25 ஆண்டுகள் நிறைவிற்காக)
 • திருப்பூர் முத்தமிழ்ச்சங்கத்தின் கலைமாமணி விருது

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரபாரதிமணியன்&oldid=3245452" இருந்து மீள்விக்கப்பட்டது