சுப்பையா நல்லமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பையா நல்லமுத்து என்பவர் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் அரிய வகை உயிரினங்களைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து தேசிய விருது பெற்றவர். காட்டு விலங்குகளைப் படம் பிடித்து ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறார். மங்கள்யான் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன் என்பவரின் உடன்பிறந்தவர்.

ஒளிப்பதிவாளராக[தொகு]

ஒளிப்பதிவில் வல்லவரான சுப்பையா நல்லமுத்து வள்ளியூரைச் சேர்ந்தவர். 1986 இல் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப் பதிவுக் கலையைப் பயின்றார். இஸ்ரோ ராக்கட் ஏவுதளமான சிறீஅரிகோட்டாவில் ஒளிப் பதிவாளராகச் சேர்ந்தார். அங்கு ராக்கட்டுகளைப் படம் பிடிக்கும் பணியைச் செய்தார். சில திரைப் படங்களிலும் ஒளிப் பதிவாளராகப் பணி புரிந்தார்.

தொலைகாட்சித் தொடர்கள்[தொகு]

வன விலங்குகள் பற்றிய டாக்குமென்டரித் தொடரை ’லிவிங் ஆன் தி எட்ஜ்’ என்னும் பெயரில் தூர்தர்சன் தொலைக் காட்சிக்குத் தயாரித்துக் கொடுத்தார். இதற்கு இலண்டனில் வழங்கப்படும் கிரீன் ஆஸ்கர் விருது இவருக்குக் கிடைத்தது. டிஸ்கவரி, அனிமல் பிளானட், நேசனல் ஜியாகிரபிக் போன்ற ஊடகங்களுக்காக அவர்கள் தேவைக்கான பணித் திட்டங்களைச் செய்து கொடுத்தார்.

ஆவணப்படங்கள்[தொகு]

கிரே பிலிம்ஸ் என்னும் நிறுவனத்தை சொந்த முயற்சியில் தோற்றுவித்து டாக்குமெண்டரி படங்களை உருவாக்கினார். ’டைகர் டைனாஸ்டி’ என்னும் ஆவணப்பட உருவாக்கத்திற்காக இவருக்கு ஒரு விருது கிடைத்தது. எட்டு ஆண்டுகளாக ஒரு புலிக் குடும்பத்தைப் படம் பிடிப்பதில் தொடர்ந்து முயன்று வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சுப்பையா நல்லமுத்து

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பையா_நல்லமுத்து&oldid=2719900" இலிருந்து மீள்விக்கப்பட்டது