சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருங்கூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு[தொகு]

சுசீந்திரம் தாணூமாலையன் அருளால் இந்திரன் தூய்மை அடைந்த பின் அவரது வெள்ளைக் குதிரையாகிய உச்சைச் சிரவம் தனக்கும் சாப விமோசனம் அருளுமாறு இறைவனைக் கோரியது. இறைவனும் அதை ஏற்று சுசீந்திரத்தின் மருங்கே வடகிழக்கேயுள்ள பிரம்ம கேந்திரமான சுப்பிரமணிய சுவாமியைக் கண்டு வணங்கி நற்கதி பெறுமாறு அருள் பாலித்தார். தன்னால் சுப்பிரமணிய சுவாமியை அர்சிக்க இயலாது எனக் கருதிய குதிரை வருந்தியது. எனவே தாணுமாலையன் 'சுனந்தனை'யும் உடன் அழைத்துச் செல்லுமாறு அறிவுரை சொல்கிறார். அதன்படி குதிரை சுப்பிரமணியரை வணங்கி சாப விமோசனம் அடைகிறது.[1]

திருமலையின் சிறப்புகள்[தொகு]

சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஓரு பகுதியாகும். இது 82 அடி உயரமுடையது. மேற்குப் புறம் உயர்ந்தும், கிழக்குப் புறம் நீண்டும் காணப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

  • சூர சம்காரத் திருவிழா
  • பெளர்ணமி கிரிவலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. கோயிலின் உள் வடக்குச் சுவரிலுள்ள தலவரலாறு