சுப்பிரமணியர் ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியர் ஞானம் என்னும் நூல் 35 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூல். நூலின் அமைதியைக் கொண்டு இதனைப் 16 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கணித்துள்ளனர். [1] [2]

மேரு மலையை முதலில் சுற்றி வருபவருக்கு மாங்கனி என்றான் சிவன். பிள்ளையார் அம்மையப்பரைச் சுற்றிவந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்டான். மயிலில் ஏறிச் சுற்றிவந்த இளையவன் முருகனை மலையரசனாக்கிப் பெற்றோர் மகிழ்ந்தனர். அசுரர் தரும் துன்பத்திலிருந்து தம்மைக் காக்கும்படி முனிவர்கள் முருகனை வேண்டினர். முருகள் அசுரர்களை அழித்து முடித்த நேரத்தில் அகத்திய முனிவர் தனக்கு அருளுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது வழங்கப்பட்ட உரை இது என்பது இந்நூல் பற்றிய கதை.

பஞ்சாக்கர மந்திரம், பீஜ மந்திரம், சத்தி தியானம் முதலானவை இதில் சொல்லப்பட்டுள்ளன. சதுரகிரி, பொதியமலை முதலான மலைப்பெயர்கள் இப்பாடல்களில்வருகின்றன. அட்டாங்க யோகத்தின் வழியே சிவநிலை கொள்க எனச் சொல்லி நூல் முற்றுப்பெறுகிறது.

பாடல் எடுத்துக்காட்டு[தொகு]

ஒழியாத சுழுமுனையில் ஒடுங்கி நல்ல

உற்றகலை வாசிசிவ யோகத் தேகி

வழியான துறையறிந்து மவுனம் கொண்டு

மகத்தான அண்டம் வரை முடிமேல் சென்று

தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு

தெளிந்துமன அறிவாலே தன்னைக் கண்டு

வெளியான பரவெளியில் வாசமாகி

வேதாந்த சத்திசிவ ஆதி காப்பே [3]

கருவிநூல்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
  2. ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - பக்கம் 311
  3. காப்புச் செய்யுள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணியர்_ஞானம்&oldid=2734902" இலிருந்து மீள்விக்கப்பட்டது