உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பிரமணியம் சிவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பிரமணியம் சிவா
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது

சுப்பிரமணியம் சிவா (Subramaniam Siva) என்பவர் தமிழ் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார்.

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

சுப்பிரமணியம் சிவா தமிழ்நாட்டில் பிறந்தவர். இவர் முதலில் வி. இசட். துரையிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் இயக்குநரானார்.

தொழில்

[தொகு]

இயக்கம்

[தொகு]

2003 இல் தனுஷ், சாயா சிங் நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான திருடா திருடி மூலம் சுப்பிரமணியம் சிவா இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொர்ந்து, அப்படத்தை தெலுங்கில் தொங்க தொங்கடி (2004) என்ற பெயரில் புதிய நடிகர்களைக் கொண்டு மறுஆக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து இவர் ஜீவாவைக் கொண்டு பொறி (2007) என்ற படத்தை உருவாக்கினார். பின்னர் அமீர் இயக்கிய யோகி (2009) படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் தயாரிப்புப் பணி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.[1]

இவர் இயக்கிய ஐந்தாவது படமாக சீடன் (2011) உருவானது. அது 2002 மலையாள படமான நந்தனம், என்ற படத்தின் மறுஆக்கமாகும். அதில் உன்னி முகுந்தன், அனன்யா முன்னணி பாத்திரங்களில் நடிக்க, தனுஷ் விருந்தினர் தோற்றதில் தோன்றினார். வேலையில்லா பட்டதாரி (2014) படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் உதவினார் மேலும் அம்மா கணக்கு (2016) படத்திற்கு உரையாடல்களை எழுதினார்.[2][3]

இவர் 2021 ஆம் ஆண்டு படம் சமுத்திரக்கனி, ஆத்மியா ராஜன், யோகி பாபு ஆகியோர் நடித்த வெள்ளை யானை மூலம் மீண்டும் இயக்குநராக வந்தார். இப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

நடிப்பு

[தொகு]

சுப்ரமணியம் சிவா 2018 ஆண்டு வெளியான வட சென்னை மூலம் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2019 ஆண்டு அசுரன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களையும் வெற்றிமாறன் இயக்கியவர். தனுஷ் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். 2021 ஆம் ஆண்டில், இவர் குற்றவியல் படமான ரைட்டர்படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.[4]

திரைப்படவியல்

[தொகு]
இயக்குநராக
ஆண்டு படம் குறிப்புகள் மேற்கோள்
2003 திருடா திருடி
2004 தொங்க தொங்கடி திருடா திருடி படத்தின் தெலுங்கு மறுஆக்கம்
2007 பொறி
2009 யோகி
2011 சீடன்
2021 வெள்ளை யானை [5]
நடிகராக
ஆண்டு படம் பங்கு மேற்கோள்
2018 வட சென்னை மணி
2019 அசுரன் முருகன்
2021 மீண்டும்
ரைட்டர் சேவியர்
2023 மருதி நகர் போலிஸ் ஸ்டேசன்
அநீதி
2024 வித்தைக்காரன்
காடுவெட்டி
உயிர் தமிழுக்கு
7 / ஜி மணி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ameer gives break to young director". 30 May 2007.
  2. "'Velaiyilla Pattathari' firms up its release plans". Archived from the original on 2 July 2014.
  3. "Amma Kanakku review. Amma Kanakku Tamil movie review, story, rating".
  4. "Writer Review". abplive.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
  5. "Thiruda Thirudi-director Subramaniam Shiva's comeback film, Vellai Yaanai, ready for release". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணியம்_சிவா&oldid=4089134" இலிருந்து மீள்விக்கப்பட்டது