சுப்பலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பலட்சுமி
பிறப்பு21 April 1936 (1936-04-21) (வயது 86)
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கல்யாணகிருஷ்ணன்
பிள்ளைகள்தாரா கல்யாண்

சுப்பலட்சுமி (Subbalakshmi) கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும், மலையாளத் திரைப்படங்களில் பணிபுரியும் நடிகையுமாவார்.[1] இவர், தற்போது மலையாளத் திரைப்படங்களில் தாய் வேடங்களில் நடித்துவரும் முக்கிய துணை நடிகைகளில் ஒருவராவார். கல்யாணராமன் (2002), பாண்டிப்படா (2005), நந்தனம் (2002) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் புகழ்பெற்றவர். இவரது மகள் தாரா கல்யாணும் மலையாளத் திரைப்படங்களில் ஒரு நடிகையாக இருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர், மறைந்த கல்யாணகிருஷ்ணனை மணந்தார். [2] தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் தாரா கல்யாண் ஒரு பிரபல நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் இருக்கிறார். திரைப்படங்களுக்குள் நுழைவதற்கு முன்பு சுப்பலட்சுமி, ஜவகர் பாலபவனில் இசை, நடனம் ஆகியவற்றை பயிற்றுவிப்பாளராக இருந்தார். 1951 முதல் அகில இந்திய வானொலியுடன் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து வந்த அனைத்திந்திய வானொலியின் முதல் பெண் இசையமைப்பாளராக இவர் புகழ் பெற்றார். [3] இவர் பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும், ஒரு பின்னணிக் கலைஞரும் ஆவார். இவர் சில தொலைக்காட்சித் திரைப்படங்களிலும் இசைத் தொகுப்புகளிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.malayalachalachithram.com/profiles.php?i=7079
  2. "വിസ്മയം തീര്‍ത്ത താരനൂപുരം". manoramaonline.com. 3 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. https://www.youtube.com/watch?v=tpxHPk5XYSk

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பலட்சுமி&oldid=3555030" இருந்து மீள்விக்கப்பட்டது