சுபோத் பட்நாயக்கு
சுபோத் பட்நாயக்கு Subodh Patnaik | |
|---|---|
| பிறப்பு | 1 பெப்ரவரி 1964 புரி, ஒடிசா |
| தேசியம் | இந்தியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | உட்கல் சங்கீத் மகாவித்யாலயா |
| பணி | நாடக இயக்குநர், நாடகாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1986-முதல் |
| அறியப்படுவது | இந்திய நாட்டுப்புற நாடகம் |
| வாழ்க்கைத் துணை | மம்தா பிரதான் |
| வலைத்தளம் | |
| Official website | |
சுபோத் பட்நாயக்கு (Subodh Patnaik) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாடக இயக்குநர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.[1] புவனேசுவரத்தை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான நாட்டிய சேதனாவையும் 'நாட்டிய கிராமம்' என்ற நாடக கிராமத்தையும் நிறுவிய நிறுவனர் ஆவார். அனைத்து கண்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒடிசாவிலிருந்து வந்த ஒரே நாடக ஆளுமை சுபோத் பட்நாயக்கு ஆவார்.[2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1964 ஆம் ஆண்டு ஒரிசாவின் பூரியில் கால்நடை மருத்துவர் பிரமோத் சந்திர பட்நாயக்கு மற்றும் டாக்டர் சசி பிரவா பட்நாயக்கு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஒடிசாவில் உள்ள உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் படித்து பட்டம் பெற்றார். தெரு நாடகம் பற்றிய அறிவு இவருக்கு இருந்தது. எனவே இவர் 1986ஆம் ஆண்டுக்கு முன்பே புது தில்லிக்குச் சென்று கற்றுக்கொண்டார். புது தில்லியில் இருந்து திரும்பிய பிறகு, நவம்பர் 10, 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று நாட்டிய சேதனா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். இவரது நாடகத்தின் பெரும்பகுதி சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.[4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1964 ஆம் ஆண்டு ஒரிசாவின் பூரியில் கால்நடை மருத்துவர் பிரமோத் சந்திர பட்நாயக்கு மற்றும் டாக்டர் சசி பிரவா பட்நாயக்கு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஒடிசாவில் உள்ள உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் படித்து பட்டம் பெற்றார். தெரு நாடகம் பற்றிய அறிவு இவருக்கு இருந்தது. எனவே இவர் 1986ஆம் ஆண்டுக்கு முன்பே புது தில்லிக்குச் சென்று கற்றுக்கொண்டார். புது தில்லியில் இருந்து திரும்பிய பிறகு, நவம்பர் 10, 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று நாட்டிய சேதனா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். இவரது நாடகத்தின் பெரும்பகுதி சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.[4]
தொழில்
[தொகு]நாட்டிய சேதனா என்ற ஒரு நாடகக் குழுவை இவர் உருவாக்கியுள்ளார். இக்குழுவில் 18 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 25 கலைஞர்கள் உள்ளனர்.[5] இந்த 25 வயதுடைய நாடகக் குழு நாடகக் கிராமம் ஒன்றையும் நிறுவியுள்ளது.[6] இவரது நாடகமான "சிந்தி" 2016ஆம் ஆண்டு சூன் மாதம் 9ஆம் தேதியன்று நேபாளத்தில் உள்ள காளிகாசுதானில் திரையிடப்பட்டது.[7] இராமாயணத்தால் ஈர்க்கப்பட்ட "ராம்லீலா" என்ற புராண நாடகம் இவரது குழுவுடன் புவனேசுவரில் உள்ள பஞ்ச கலா மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது.[8]
பன்னாட்டு பங்களிப்புகள்
[தொகு]பட்நாயக் பெல்சியத்தில் நடந்த ஒரு பன்னாட்டு தெரு நாடக விழாவில் பங்கேற்றார். அதே ஆண்டு, பிரான்சின் பாரிசு நகரத்தில் நடைபெற்ற 8ஆவது உலக நாடக மாநாட்டில் கலந்து கொள்ள தனது குழுவுடன் சென்றார். நாடகம் மற்றும் கல்வி சங்கத்தால் 1995 முதல் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுவரும் பன்னாட்டு அளவிலான நாடக மாநாட்டில் இவர் பங்கேற்று வருகிறார். மாநாட்டின் முந்தைய அமர்வுகள் ஆத்திரேலியா, கென்யா, நார்வே, கனடா, ஆங்காங்கு மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்றன.[9]
பாராட்டுகள்
[தொகு]பட்நாயக்கு ரிசிகேசு சட்டோபாத்யா சும்ருதி சம்மன் விருதை மேற்கு வங்காளத்தின் கோபர்தங்கா ரூபந்தர் என்ற நாடகக் குழுவால் பெற்றார்.[5]
நாடகவியல்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | மேடை | மூலம் |
|---|---|---|---|
| 2015 | அபூ | பூர்வோட்டர் தேசிய நாடக விழா | [10] |
| 2016 | நியன் (நெருப்பு) | அன்னபூர்ணா ரங்கமஞ்சா (புரி) மற்றும் நால்கோ ஆடிட்டோரியம் (புவனேசுவர்) | [11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Provoking thought with his plays". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-12. Retrieved 2019-01-30.
- ↑ Chakra, Shyamhari (2012-08-30). "A pioneer in theatre" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/theatre/a-pioneer-in-theatre/article3839107.ece.
- ↑ Singha, Minati (13 October 2015). "Natya Chetana presents 'Abu' in NE". The Times of India. Retrieved 2019-01-28.
- ↑ 4.0 4.1 "Provoking thought with his plays". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-12. Retrieved 2019-01-28.
- ↑ 5.0 5.1 Pioneer, The. "Natya Chetana dramas bridge Odisha, Bengal". The Pioneer (in ஆங்கிலம்). Retrieved 2019-01-28.
- ↑ "Odisha's unique 'theatre village'". www.merinews.com. Retrieved 2019-01-28.
- ↑ "Stairs of life". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-12. Retrieved 2019-01-28.
- ↑ Bureau, Latest Odisha News (2016-08-12). "Ramalila performed at Bhanja Kala Mandap by Natya Chetana". Latest Odisha News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-01-28.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ "Thespian attends theatre congress". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2019-01-28.
- ↑ Singha, Minati (31 January 2019). "'Abu' in NE".
- ↑ "Theatre space goes beyond stage". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2019-01-30.