சுபி சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபி சுரேஷ்
பிறப்பு1981/1982
திருப்பூணித்துறை, கேரளம், இந்தியா
இறப்பு (அகவை 41)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்Indian
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், நகைச்சுவை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–2023

சுபி சுரேஷ் (Subi Suresh, 1981/1982 - 22 பெப்ரவரி 2023) என்பவர் ஒரு இந்திய மலையாள நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், நகைச்சுவை நடிகை, மேடை நிகழ்ச்சி கலைஞர் ஆவார். இவர் குறிப்பாக தஸ்கரா லஹலா (2010), கிரஹநாதன் (2012), டிராமா (2018) போன்ற பிரபலமான மலையாளத் திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவரது நகைச்சுவைக் குரலுக்காக பரவலாக அறியப்பட்டார். சுபி தொழில்முறை நகைச்சுவை நடிகையாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் சினிமாலா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார். [1] [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுபி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்பூணித்துறையில் பிறந்தார். இவர் கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சுரேஷ் மற்றும் அம்பிகா ஆவர். [4] திருப்பூந்துறை அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை படித்தார். [5]

தொழில்[தொகு]

சுபி பெரும்பாலும் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக மலையாள பார்வையாளர்களிடையே அறியப்பட்டவர். இவர் 1993 ஆகத்தில் ஏசியாநெட்டின் திரைப்பட செய்தி நிகழ்சியான சினிமாலா என்ற நிகழ்சியில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். [6] 2001 ஆம் ஆண்டு நிசார் இயக்கிய அபரணர் நகரத்தில் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். சுபி தொடர்ந்து எல்சம்மா என்ன ஆங்குட்டி, பஞ்சவர்ண தத்தா, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், டிராமா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். [7]

சுபி பின்னர் தக்சரா லஹலா (2010) , குட்டிப்பட்டாளம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் அதே போல் கிருஹநாதன் (2012) என்ற திரைப்படத்திலும் தோன்றினார். [8] இவர் பல்வேறு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நகைச்சுவை நடிகையாகவும் பங்கேற்றார். [9] இவர் கொச்சி கலாபவன் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் பல குரல் நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்பது அசாதாரணமாக இருந்த நேரத்தில் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சிகளின் முகமாக விளங்கினார்.

இறப்பு[தொகு]

22 பெப்ரவரி 2023 அன்று, கல்லீரல் நோயால் கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தன் 41வது வயதில் சுபி இறந்தார். [10]

குறிப்புகள்[தொகு]

  1. "Actress And TV Host Subi Suresh Dies At 41". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
  2. "Comedian and TV host Subi Suresh passes away at the age of 41". பார்க்கப்பட்ட நாள் 22 February 2023 – via The Economic Times - The Times of India.
  3. Report, Gulf News. "Popular Malayalam actress and TV host Subi Suresh dies". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
  4. "Subi Suresh, Malayalam actress and anchor, dies at 41". TimesNow (in ஆங்கிலம்). 2023-02-22. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  5. "സുബിയുടെ രോഗവിവരം അധികമാരും അറിഞ്ഞിരുന്നില്ല: ഹരിശ്രീ അശോകൻ". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  6. "Subi Suresh, Malayalam actor and popular TV show host, dies at 41". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. "ബ്രേക്ക് ഡാൻസറായി കലാരംഗത്ത്; കരിയർ മാറ്റിയത് ടിനി ടോം; വിവാഹവും വിധി തട്ടിയകറ്റി". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  8. "Subi was unmatchable on stage shows, says Jayaram". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  9. "Malayalam actress and TV anchor Subi Suresh passes away". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  10. "'ഒരു സീരിയസ് ലിവർ പേഷ്യന്റായാണ് സുബി ആശുപത്രിയിലെത്തിയത്'; ചികിത്സിച്ച ഡോക്ടർ ട്വന്റിഫോറിനോട്". 24 News. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபி_சுரேஷ்&oldid=3664359" இலிருந்து மீள்விக்கப்பட்டது