உள்ளடக்கத்துக்குச் செல்

சுபிக் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபிக் விரிகுடா
சுபிக் விரிகுடா is located in லூசோன் பெருநிலம்
சுபிக் விரிகுடா
சுபிக் விரிகுடா
சுபிக் விரிகுடா is located in பிலிப்பீன்சு
சுபிக் விரிகுடா
சுபிக் விரிகுடா
சூபிக் விரிகுடாவின் 1902 கடல்வழி வரைபடம்
அமைவிடம்லூசோன், பிலிப்பீன்சு
ஆள்கூறுகள்14°47′24″N 120°13′57″E / 14.79000°N 120.23250°E / 14.79000; 120.23250
வகைவிரிகுடா
எதன் பகுதிதென்சீனக் கடல்
தீவுகள்கிராண்ட் தீவு
குடியேற்றங்கள்
  • மோரோங்
  • ஒலங்கப்போ
  • சுபிக்

சுபிக் விரிகுடா (Subic Bay) என்பது பிலிப்பீன்சு, லூசோன் தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். இது மணிலா விரிகுடாவிற்கு வடமேற்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. தென்சீனக் கடலின் நீட்சியாக இருக்கும் இதன் கடற்கரைப் பகுதிகள், முன்பு ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முக்கியத் கடற்படை தளமான சுபிக் விரிகுடா ஐக்கிய அமெரிக்க கடற்படை தளம் (U.S. Naval Base Subic Bay) இருந்த இடமாகும். தற்போது, இந்த இடம் சுபிக் விரிகுடா சுங்கவரிவிலக்கு மண்டலம் (Subic Bay Freeport Zone)[1] என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒரு தொழில்முறை மற்றும் வணிகப் பகுதியாகவும் மாறியுள்ளது.

சுபிக் விரிகுடா எனும் பெயர் அதன் நீர்ப்பரப்புக்கு மட்டுமன்றி, அதைச் சுற்றியுள்ள நகரங்களையும் கட்டமைப்புகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] சுபிக் வளைகுடா நீண்ட காலமாக அதன் ஆழமான மற்றும் பாதுகாப்பான நீர்ப்பரப்பிற்காக அறியப்பட்ட போதிலும்,[1] அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமதளமான நிலப்பரப்பு இல்லாததால் அங்கு வளர்ச்சிப் பணிகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்றன.

வரலாறு

[தொகு]

1542-இல், எசுபானிய மாலுமியான ஜுவான் டி சால்சிடோ (Juan de Salcedo) சுபிக் வளைகுடாவிற்குள் கப்பல் வழிப் பயணம் மேற்கொண்டார். இருப்பினும், எசுப்பானியாவின் முக்கிய கடற்படைத் தளம் அருகிலுள்ள மணிலா விரிகுடாவில் (Manila Bay) நிறுவப்பட்டதால், சுபிக் விரிகுடாவில் எந்தத் துறைமுகமும் உருவாக்கப்படவில்லை.

1762-இல் பிரித்தானியர் இந்த மணிலா தளத்தைக் கைப்பற்றியபோது, எசுபானியர்கள் மாற்று இடத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். அந்தக் கட்டத்தில் தான் சுபிக் விரிகுடா ஓர் உத்திசார் துறைமுக இடமாகக் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1884-ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் மன்னர் பன்னிரண்டாம் அல்போன்சோ, சுபிக் பகுதியை ஒரு கடற்படைத் துறைமுகமாகவும்; அதனுடன் தொடர்புடைய சொத்துக்கள் அனைத்தும் கடற்படை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அரசாணை பிறப்பித்தார்.[3] பிலிப்பீன்சு புரட்சியின் போது (Philippine Revolution), சுபிக் விரிகுடாவில் இருந்த எசுபானிய கடற்படைத் தளம் பிலிப்பீன்சின் புரட்சிப் படைகளால் கைப்பற்றப்பட்டது.

பிலிப்பீன்சு-அமெரிக்கப் போர்

[தொகு]

1899-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிலிப்பீன்சு-அமெரிக்கப் போரின் போது, அமெரிக்கர்கள் இந்த எசுப்பானியத் தளத்தைக் கைப்பற்றினர். பின்னர் 1991 வரை இந்த விரிகுடாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில், இங்குள்ள கடற்படை வசதிகள் பெருமளவில் கட்டமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன.

குறிப்பாக, 1950-களின் தொடக்கத்தில் ஒரு மலையின் மீது அதன் பாதி யை வெட்டி எடுத்து, அந்த மண்ணைக் கொண்டு சுபிக் விரிகுடாவின் ஒரு பகுதியைத் தூர்த்து (நிலமீட்பு செய்து), ஒரு புதிய கடற்படை வானூர்தி நிலையம் கட்டப்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இந்தத் தளத்தின் மீது பிலிப்பீன்சு தனது இறையாண்மை ஆட்சியை நிலைநாட்டியபோது, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பரப்பளவு 24,000 எக்டேரிலிருந்து (59,000 ஏக்கர்) 6,300 எக்டேர் (16,000 ஏக்கர்) அளவிற்கு குறைக்கப்பட்டது.[1][3]

1991-ஆம் ஆண்டு பினாதுபோ எரிமலை (Mount Pinatubo) எரிமலை வெடிப்புக்குப் பிறகு, அமெரிக்கர்கள் இந்தத் தளத்தை மூடினர். அதன் பின்னர், இப்பகுதி சுபிக் சுங்கவரிவிலக்கு மண்டலமாக மாற்றப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Martin W. Lewis (October 22, 2010). "Subic Bay: From American Servicemen to Korean Businessmen". GeoCurrents. Retrieved 16 August 2013.
  2. ↑ "Official website of SBMA". SBMA official website. SBMA. Retrieved 5 September 2016.
  3. 1 2 "History". Subic.com. Retrieved 16 August 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபிக்_விரிகுடா&oldid=4630021" இலிருந்து மீள்விக்கப்பட்டது