சுபா ரவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபா ரவுல்
மும்பை மேயர்
பதவியில்
2007–2009
முன்னையவர்தத்தா தல்வி
பின்னவர்ஷ்ரத்தா ஜாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிவசேனா
வேலைஆயுர்வேத பயிற்சியாளர்

சுபா ரவுல் (Shubha Raul) (பிறப்பு 1967) இந்தியப் பெருநகரான மும்பையின் மேயராக (2007-09) 33 மாத காலத்திற்கு இருந்தார். [1] அவர் மார்ச் 10, 2007 அன்று மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் 124 ஆண்டுகள் பழமையான குடிமை அமைப்பின் மூன்றாவது பெண் மேயராக இருந்தார். [2] வடக்கு மும்பை புறநகர்ப் பகுதியான தஹிசரைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கார்ப்பரேட்டராகவும் பணியாற்றினார். [3] மேலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகமும்பை மாநகராட்சியின்முக்கியமான நிலைக்குழுக்களில் இரண்டு ஆண்டுகளாக இருந்தார். [4]

ரவுல் சிவசேனா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்,மற்றும் ஆயுர்வேத வைத்திய முறையில் சிகிச்சையளிப்பவரும் ஆவார். [5]

அவர் மும்பையின் போரிவலியில் வசிக்கிறார். அவருக்கு தன்வி மற்றும் மயூரி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது கணவர் உமேஷ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் தோட்டக்கலை மேலாளராகப் பணிபுரிந்தார்.

நவம்பர் 2009 உடன் முடிவடைந்த மும்பை மேயராக இருந்த காலத்தில், சுபா ரவுல் தனது இரண்டு சாதனைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளார்: செயற்கை குளங்களை அமைத்து சூழலுக்கு கேடு விளைவிக்காத கணேஷ் திருவிழா நடத்தியது மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் உக்கா புகைக்குழாய்களைத் தடை செய்தது ஆகியவையே அந்தச் சாதனைகள் என்று குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]

கணேஷ் சிலை உயரம் குறைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது, ஒரு பசுவை தத்தெடுத்து உரிமம் இல்லாமல் தனது பங்களாவில் வைத்திருந்தது, உக்கா புகைக்குழாய் கடைகளை உடைத்தது, ஏழு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் சென்றது என இவரது பதவிக்காலம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபா_ரவுல்&oldid=3315486" இலிருந்து மீள்விக்கப்பட்டது