சுபாசினி ஜென்னா
சுபாசினி ஜென்னா | |
|---|---|
| உறுப்பினர்-17ஆவது ஒடிசா சட்டமன்றம் | |
| பதவியில் 5 சூன் 2024 – முதல் | |
| முன்னையவர் | நித்தியானந்தா சாகு |
| தொகுதி | பசுதா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 செப்டம்பர் 1995 |
| குடியுரிமை | இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
| துணைவர் | இரவீந்திர குமார் ஜென்னா |
| பணி | அரசியல்வாதி |
சுபாசினி ஜென்னா (Subasini Jena)(பிறப்பு 1967) ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பசுதா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சுபாசினி பசுதாவை சேர்ந்தவர். இவர் தொழிலதிபர் இரவீந்திர குமார் ஜெனா மணந்தார். சொந்தமாக வணிகமும் செய்து வருகிறார். இவர் தனது இடைநிலைக் கல்வியினைக் கலைப் பிரிவில் 1986-ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட எப். எம். கல்லூரியில் முடித்தார்.[3]
அரசியல்
[தொகு]சுபாசினி 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பசுதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பிஜு ஜனதா தளக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இவர் 83,314 வாக்குகளைப் பெற்று (43.66%) இந்திய தேசிய காங்கிரசின் பிஜான் நாயக்கை 20,377 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5][6] இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, அதிக அளவு சொத்துக்கள் கொண்ட ஒடிசாவின் முதல் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basta Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
- 1 2 "Full list of Odisha Assembly elections 2024 winners". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-06.
- ↑ "Subasini Jena(BJD):Constituency- BASTA(BALASORE) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-06.
- ↑ "Basta, Odisha Assembly Election Results 2024 Highlights: BJD's Subasini Jena defeats INC's Bijan Nayak with 20377 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
- ↑ "Basta Constituency Election Results 2024: Basta Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
- ↑ "Subasini Jena , BJD Election Results LIVE: Latest Updates On Subasini Jena , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. Retrieved 2024-06-06.
- ↑ "Odisha Assembly Elections 2024: Top 5 richest candidates in fray. Web". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-06-07.