உள்ளடக்கத்துக்குச் செல்

சுபாக்

ஆள்கூறுகள்: 8°15′33″S 115°24′10″E / 8.25917°S 115.40278°E / -8.25917; 115.40278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாக்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பாலி தபனான் உயர்நில நெல் வயல்கள்
அலுவல்முறைப் பெயர்சுபாக் நீர்ப் பாசன அமைப்பு
அமைவிடம்பாலி, இந்தோனேசியா
உள்ளடக்கம்
  1. உலுன் தானு பத்தூர் கோயில்
  2. பத்தூர் ஏரி
  3. பெக்கேரிசான் நீர்நிலைகள்
  4. சத்தூர் அங்கா பத்துகாரு
  5. அரச நீர்க் கோயில் தாமான் அயூன் கோயில்
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (iii), (v), (vi)
உசாத்துணை1194rev
பதிவு2012 (36-ஆம் அமர்வு)
பரப்பளவு19,519.9 ha (48,235 ஏக்கர்கள்)
Buffer zone1,454.8 ha (3,595 ஏக்கர்கள்)
ஆள்கூறுகள்8°15′33″S 115°24′10″E / 8.25917°S 115.40278°E / -8.25917; 115.40278
சுபாக் is located in பாலி
சுபாக்
பாலியில் சுபாக் அமைவிடம்

சுபாக் (ஆங்கிலம்: Subak; பாலினியம்; இந்தோனேசியம்: Subak) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் உள்ள நெல் வயல்களுக்கான படிமுறை (terraced rice fields) நீர் மேலாண்மை அல்லது நீர்ப்பாசன அமைப்பாகும். தனித்துவம் வாய்ந்த இந்த அமைப்பு 9-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

பாலி மக்களைப் பொறுத்தவரையில், நீர்ப்பாசனம் என்பது தாவரங்களின் வேர்களுக்கு தண்ணீர் வழங்குவது மட்டுமல்ல; அதற்கு மேலும் ஓர் ஒருங்கிணைந்த செயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் நீர் பயன்படுகிறது என கருதுகிறார்கள்.[1]

இந்த அமைப்பு ஏறக்குறைய 20,000 எக்டேர் (49,000 ஏக்கர்) பரப்பளவில் ஐந்து படி (அடுக்கு) முறை நெல் வயல்களையும்; வயல்நீர் கோயில்களையும் (water temples) கொண்டுள்ளது.[2] சுபாக் எனப்படும் இந்தக் கூட்டுறவு நீர் மேலாண்மையின் முக்கிய மையமாக அங்குள்ள கோயில்கள் பெரும் பங்காற்றுகின்றன.

வரலாறு

[தொகு]

9-ஆம் நூற்றாண்டில், பாலி தீவில் ஆதிக்கம் செலுத்திய இராச்சியங்கள், அரசியல்துறையிலும் வளர்ச்சி பெற்ற போது சுபாக் நீர்ப்பாசன அமைப்பும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது.[3] முதன்முதலில் சுபாக் அமைப்பு பற்றி அறியப்பட்ட அல்லது எழுதப்பட்ட பதிவு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறியப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் உரைப் பதிவு, கசுவகாரா (kasuwakara) என்ற பெயரில் சுபாக் அமைப்பு முறையைக் குறிப்பிடுகிறது. பின்னர் அந்தப் பெயர் சுவாக் (suwak) என்றும்; சுபாக் (subak) என்றும் மாற்றம் கண்டது. ஆனால் அதே காலகட்டத்தைச் சேர்ந்த பிற ஆவணங்களும்; இந்த சுபாக் அமைப்பை பெசாகி கோயிலுடன் இணைக்கின்றன.

இதன் மூலம் சுபாக் அமைப்பு 11-ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப் படுகிறது.[3]

அமைப்பு

[தொகு]

சுபாக் என்பது சுற்றுச்சூழல் ரீதியாக ஒரு நிலையான பாரம்பரிய நீர்ப்பாசன முறையாகும்.[4] பாலினிய வேளாண்மைச் சமூகத்தை, பேல் பஞ்சார் (bale banjar) எனும் கிராமத்தின் சமூக மையம்; மற்றும் பாலினிய கோயில் அமைப்புகளுக்குள் சுபாக் முறைமை ஒன்றாக இணைக்கிறது.[5]

பாசன நீரைப் பகிர்ந்து அளிக்கும் முறைமையில்தான், சுபாக் அமைப்பின் வலிமையும் அதன் சிறப்புத் தன்மையும் அடங்கி உள்ளது. அதே வேளையில், சுபாக் திட்டங்களில் கோயில்களின் செயல்பாடுகளும் ஒன்றுபடுகின்றன.[5] அத்துடன் சுபாக் அமைப்பு முறை என்பது மனித உடல் மற்றும் மனுக்குலத்தின் ஆன்மீகத் தன்மைகளாலும் பிணைக்கப்பட்டு உள்ளதாக பாலி மக்கள் நம்புகிறார்கள். சுபாக் கட்டமைப்பு, அதற்குள் நடைபெறும் சமய விழாக்களிலும் அதன் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.[6]

சுபாக்கில் தனிநபர்களுக்கும், குழுச் சடங்குகளுக்கும் பொருந்தி வரும் சடங்குகள் உள்ளன. அதனால்தான் சுபாக் என்பது வேளாண்மை துறையில், நீர் ஆதாரத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. கோயில்களின் பல்வேறு சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மூல அமைப்பாகவும் விளங்குகிறது.[7][8]

காட்சியகம்

[தொகு]
  • சுபாக் நீர்ப்பாசன காட்சிப் படங்கள்
சதிலுவி நெல் வயல்கள் அமைப்பு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. Stephen Lansing (1987). "Balinese "Water Temples" and the Management of Irrigation". American Anthropologist 89 (2): 326–341. doi:10.1525/aa.1987.89.2.02a00030. 
  2. Wardana 2015, ப. 1.
  3. 3.0 3.1 "The Subak System In Bali: Bali's Complex Irrigation System And Only UNESCO World Heritage Site". finnsbeachclub.com. Retrieved 2024-05-29.
  4. Norken 2019, ப. 1.
  5. 5.0 5.1 Suwardani & Paramartha Suasthi, ப. 84.
  6. Suwardani & Paramartha Suasthi, ப. 85.
  7. Suwardani & Paramartha Suasthi, ப. 86.
  8. Suwardani, Ni Putu; Paramartha, Wayan; Suasthi, I Gusti Ayu (2018). "Bale banjar and its implications on the existence of Bali sociocultural communities". In Sarjana, I Putu; Wibawa, I Putu Sastra (eds.). International seminar on tolerance and pluralism in Southeast Asia (PDF) (Proceedings of the international seminar held on October 2, 2018). Universitas Hindu Indonesia (Unhi) Denpasar. pp. 83–90. ISBN 978-602-52255-7-4.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாக்&oldid=4223607" இலிருந்து மீள்விக்கப்பட்டது