சுபல உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Subala
The text extols Narayana (Vishnu)[1]
தேவநாகரிसुबाल
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புSubāla
உபநிடத வகைSamanya (general)[2]
தொடர்பான வேதம்யசுர் வேதம்[3]
அத்தியாயங்கள்16[4]
அடிப்படைத் தத்துவம்வைணவ சமயம்[4]

சுபல உபநிடதம் ( Subala Upanishad ) (सुबाल उपनिषत्) சுபலோபநிஷத் (सुबालोपनिषत्) என்றும் அழைக்கப்படும், இது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட ஒரு உபநிடதமாகும். சுக்ல யசுர்வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது இந்து சமயத்தின் சாமான்ய உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

சுபல உபநிடதமும், ஒப்பீட்டளவில் பழைய முத்கல உபநிடதமும் சேர்ந்து, இருக்கு வேதத்தின் புருஷ சூக்தத்தைப் பற்றி விவாதிக்கும் இரண்டு உபநிடதங்களாகும். [5] இவை இரண்டும் நாராயணன் (விஷ்ணு) பிரம்மம் (உயர்ந்த உண்மை, உன்னதமானவர்) என்று வலியுறுத்துவதில் குறிப்பிடத்தக்கது.[5][6][7] புருஷ சூக்தத்தின் அதிகமான வசனங்களை முன்வைப்பதிலும், நாராயணனை தந்தையாகவும், தாயாகவும், அடைக்கலமாகவும், நண்பனாகவும், ஒவ்வொரு உயிரினத்தின் குறிக்கோளாகவும் அறிவிப்பதில் முத்கல உபநிடதத்திலிருந்து உரை வேறுபடுகிறது.[5][8] [4][6]


வேதாந்தத் தத்துவத்தின் விசிஷ்டாத்வைதப் பள்ளியின் 11 ஆம் நூற்றாண்டின் ஆதரவாளரும், கிபி 2 ஆம் மில்லினியத்தில் வைணவத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான இராமானுசரால் இந்தன் உரை அடிக்கடி குறிப்பிடப்பட்டது.[9] இராமானுசரின் விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கு சுபல உபநிடதத்தின் நாராயண இறையியல் தீர்க்கமான உந்துதலாக இருந்திருக்கலாம் என்று சில நவீன அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வரலாறு[தொகு]

இதனை இயற்றிய ஆசிரியர் அல்லது தொகுப்பு தேதி தெரியவில்லை. இது ஒரு பிற்கால உபநிடத உரை என்று கருதப்படுகிறது.[10]

இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகளும் சுபலோபநிஷத் என்ற தலைப்பில் காணப்படுகின்றன. [7] இராமன் அனுமனுக்கு சொல்லப்பட்டதாகக் கூறப்படும் முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 30வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[11]

உள்ளடக்கம்[தொகு]

உபநிடதம் பதினாறு அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டவியல், உடலியல், உளவியல் மற்றும் மெட்டாபிசிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைக் கையாள்கிறது.[12]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Mahadevan 1975, ப. 186–187.
  2. 2.0 2.1 Tinoco 1997, ப. 87.
  3. Aiyar 1914, ப. 61.
  4. 4.0 4.1 4.2 Aiyar 1914, ப. 61–77.
  5. 5.0 5.1 5.2 Jan Gonda 1975, ப. 499–510.
  6. 6.0 6.1 Mahadevan 1975, ப. 182, 186–187.
  7. 7.0 7.1 Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA578, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 578–579
  8. Hattangadi 2000.
  9. Winternitz 1972, ப. 224.
  10. Hans Henrich Hock (2007). An Early Upaniṣadic Reader: With Notes, Glossary, and an Appendix of Related Vedic Texts. Motilal Banarsidass. பக். 78–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3214-5. https://books.google.com/books?id=jG7XAAAAMAAJ. 
  11. Deussen 1997, ப. 557.
  12. Winternitz 1972, ப. 222.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபல_உபநிடதம்&oldid=3847938" இலிருந்து மீள்விக்கப்பட்டது