சுன்கத் ஜோசப் வர்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுன்கத் ஜோசப் வர்க்கி
பணிஅரசியல்வாதி
விருதுகள்Knight of the Order of St. Gregory the Great

சுன்கத் ஜோசப் வர்க்கி (Chunkath Joseph Varkey, மலையாளம்: ചുങ്കത്ത് ജോസഫ് വർക്കി; 1891 - 1953) என்பவர் ஒரு இந்திய பேராசிரியர், பத்திரிக்கையாளர், சென்னை மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சராவார்.[1][2][3]

வாழ்க்கை[தொகு]

வர்க்கி சைரோ மலபார் கத்தோலிக்க நஸ்ரானி குடும்பத்தில் கோட்டப்பாடியில், (தற்போதைய கேரளம்) 1891 ஆண்டு பிறந்தார். இவர் மங்களூரில் உள்ள புனித அலோசியஸ் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகவும், பிறகு திருச்சூர் புனித தாமஸ் கல்லூரியிலும் பணியாற்றினார். மேலும் இவர் அகில இந்திய கத்தோலிக்க லீக்கின் (தற்போது அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியம்) செயலாளராகப் பணியாற்றினார். இவர் மேற்குக் கடற்கரை இந்திய கிருத்துவர் தொகுதியின் பிரதிநிதியாக சென்னை சட்டமன்றத்தில் 1937-42 காலத்தில் இருந்தார். The Catholic Educational Review என்ற இதழின் நிறுவனராகவும் ஆசிரியராகவும் இருந்தார். 1937 தேர்தலில் சி ராஜகோபாலாச்சாரி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தில் அதிகாரத்துக்கு வந்தது. இந்த ஆட்சிகாலத்தில் கல்வியமைச்சராக இருந்த பி. சுப்பராயனின் கீழ் வர்க்கி கல்விச் செயலாளராக ஆனார். சனவரி 1939 ஆண்டு சுப்பராயன் தலைமையில் அமைந்த அரசில் இவர் கல்வி அமைச்சராக ஆனார். அக்டோபர் 1939 இல் காங்கிரசு அரசின் இராஜிநாமா வரை இவர் இப்பதவி வகித்தார். பின்னர் கொச்சியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் இவர் துணை முதல்வராக இணைந்து பணியாற்றினார். இவர் தன் 62வது வயதில் இறந்தார்.[4] இவரது உடல் கோந்துருத்தேவில் உள்ள புனித ஜான் நிபோமுசின் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]