சுனி சோப்ரா
சுனி சோப்ரா | |
|---|---|
| பிறப்பு | c. 2001 அல்லது 2002 |
| பணி | எழுத்தாளர் |
| பெற்றோர் |
|
| உறவினர்கள் | கம்னா சந்திரா (தாய்வழிப் பாட்டி) தனுஜா சந்திரா (தாய்வழி சித்தி) |
சுனி சோப்ரா (Zuni Chopra) ஓர் இந்திய எழுத்தாளர். இவர், திரைப்பட தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா மற்றும் பத்திரிகையாளர் அனுபமா சோப்ராவின் மகள் ஆவார்.[1] இவர் தி ஹவுஸ் தட் ஸ்போக் என்ற புதினத்திற்காக மிகவும் அறியப்படுகிறார். இவர் வேறு மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார். மாணவர்கள் மீதான தேர்வு நெருக்கடியைப் பற்றி பேசிய தி மௌன்ட்டைன் ரேஞ்ச் என்ற இவரது கவிதை, இந்திய ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றது. இவர் செப்டம்பர் 2019-இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தைத் தனது முதன்மைப் பாடமாகப் பயின்றார்.[2][3][4][5][6] இவர் யங் ஆத்தர் அவார்ட்ஸ் 2018-க்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றார்.[7]
படைப்புகள்
[தொகு]சோப்ராவின் முதல் கவிதை நூலான தி லேண்ட் ஆஃப் ட்ரீம்ஸ் 2011-லும், இரண்டாவது கவிதை நூலான பெயிண்டிங் வித் வேர்ட்ஸ் 20141-லும் அமேயா பிரகாஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[8] இவ்விரு நூல்களும் இவரது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
சோப்ராவின் முதல் புதினமான தி ஹவுஸ் தட் ஸ்போக், இவருக்கு 15 வயதாக இருந்தபோது, 2017-ஆம் ஆண்டு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[8][2][1] இது இவரது தோழிகள் மூவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[2] இப்புத்தகம் முதலில் இலண்டனைப் பின்னணியாகக் கொண்டிருந்தது; ஆனால் கதைக்கு 'உயிர் கொடுப்பதில்' சிரமம் ஏற்பட்டதால், இவர் அதன் பின்னணியைக் காஷ்மீருக்கு மாற்றினார்.[1]
சிறுகதைகள், மிகச் சுருக்கமான கதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான இவரது இரண்டாவது புத்தகமான தி ஐலேண்ட் ஆஃப் தி டே பிஃபோர் 2018-இல் வெளியிடப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "Zuni Chopra: It's important for people of my age to find ways to tell stories". Hindustan Times (in ஆங்கிலம்). 4 October 2018. Retrieved 2022-06-25.
- 1 2 3 Krithika, R. (6 February 2017). "I think in words, not images". The Hindu. https://www.thehindu.com/books/books-authors/%E2%80%98I-think-in-words-not-images%E2%80%99/article17201544.ece.
- ↑ "Vidhu Vinod Chopra's daughter Zuni on her novel The House That Spoke". Hindustan Times. https://www.hindustantimes.com/books/vidhu-vinod-chopra-s-daughter-zuni-on-her-novel-the-house-that-spoke/story-TU6xdnjfWV3MhGFgu1yVGO.html.
- ↑ "Vidhu Vinod Chopra's daughter Zuni Chopra pens poem on exam pressure". The Indian Express. http://indianexpress.com/article/lifestyle/books/zuni-chopra-vidhu-vinod-chopras-daughter-pens-poem-on-exam-pressure-4540306/.
- ↑ "Meet the 15-year-old author of a new book on Kashmir". Vogue. https://www.vogue.in/content/meet-15-year-old-author-new-book-kashmir/#s-cust0.
- ↑ "Zuni Chopra talks about 'The House That Spoke' to BBC World News". Penguin India. 8 March 2017. Retrieved 23 May 2018.
- ↑ "Meet the 15-year-old author of a new book on Kashmir". Gulf News. https://gulfnews.com/xpress/news/10-make-it-to-young-author-awards-shortlist-1.2132689.
- 1 2 "All Books". Zuni Chopra (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 December 2024. Retrieved 2022-06-25.