சுனில் நலியத்
சுனில் நலியத் Sunil Naliyath | |
|---|---|
| பிறப்பு | 1969 (அகவை 56–57) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| தொழில் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
| தேசியம் | இந்தியர் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது 2022 கேரள சாகித்திய அகாடமி விருதுகள் 2014 |
சுனில் நலியத் (Sunil Naliyath) என்பவர் இந்தியாவின் தென் மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். வங்காள மொழியில் உள்ள பல புகழ் பெற்ற இலக்கியங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2014 ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது உடபட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சுனில் அவர்கள் 1969 இல் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தா வாழ்ந்த அரசியல் ஆர்வலர், எழுத்தாளர், பகுத்தறிவாளர் மற்றும் செய்தித்தாள் ஆசிரியராக இருந்த டி.பி. நலியாத்தின் மகனாகப் பிறந்தார்.[1] அவரது தந்தை, டி.பி. நலியாத், கொல்கத்தாவில் கேரளா ராஷ்மி என்ற பத்ரிகையின் ஆரம்பகால வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார். அவர் பிறந்த உடனேயே, அவர் தனது தாயுடன் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளத்திற்கு குடியேறினர்.[2]
இவர் திருவங்குளத்தில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் மேற்கு வங்காளத்திற்குத் குடியேறினர்,கொல்கத்தாவில் உள்ள ஆந்திரா அசோசியேசன் கல்வி அறக்கட்டளையின் பள்ளியில் படித்தார்.[3] வங்காளத்தில் இருந்தபோதும், அவரது தந்தையின் மலையாள மொழி புத்தகங்களின் தொகுப்பும், அவர் வாங்கிய மலையாள பத்ரிகைகளும் அவரது தாய்மொழியான மலையாளத்துடனான தொடர்பை வளர்க்க அவருக்கு உதவின. அவர் இளங்கலைப் படிப்பில் ஆங்கிலத்தை படித்தபோது் வங்காளத்தை மூன்றாவது மொழியாகப் படித்தார். அவருடைய இளங்கலைப் படிப்பின் போதுதான் அவருக்கு வங்காள இலக்கியப் படைப்புகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
தொழில்
[தொகு]கல்லூரி படிப்பை முடிந்த உடனேயே, அவர் கொல்கத்தாவில் வேலை பெற்றார். அந்த நேரத்தில், சுனில் கேரளாவில் உள்ள பல பத்ரிகைகளுக்கு வங்காளத்தின் கால்பந்து விளையாட்டு பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[3] பின்னர் அவர் மாத்ருபூமி செய்தித்தாள் நிறுவனத்தில் கொல்கத்தாவின் நிருபராகப் பணியாற்றினார், மேலும் 1997 முதல் 1999 வரை அவர் மாத்ருபூமியின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.[3]
இலக்கிய பணி
[தொகு]அவருடைய குழந்தைப் பருவத்தில் எழுதப்பட்ட குறிப்புகள், அக்காலத்தில் எம்.பி. நாராயண பிள்ளையின் ஆசிரியர் மேற்பார்வையில் வெளிவந்த ட்ரையல் வார இதழில் வெளியிடப்பட்டன. பின்னர், கதைகள் கதா என்றலும், தேசபிமானியின் பாலபம்க்தி (குழந்தைகள் இலக்கியத்திற்கான பத்தி) ஆகியவற்றிலும் வெளியிடப்பட்டன.
சுனிலின் முதல் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு, மலையாளத்தில் கிருகலட்சுமி இதழால் வெளியிடப்பட்ட பெண் எழுத்தாளர்களின் கதைப் பதிப்பிற்காக அவர் எழுதிய சுசித்ரா பட்டாச்சார்யாவின் ஒரு வங்க மொழி கதையின் மொழிபெயர்ப்பாகும்.[1] சுனிலின் மொழிபெயர்ப்பை விரும்பிய சுசித்ரா பட்டாச்சார்யா, பின்னர் தனது அனைத்து படைப்புகளையும் மொழிபெயர்க்கும் உரிமையை சுனிலுக்கு வழங்கினார்.[1] பின்னர் அவர் மற்ற குறிப்பிடத்தக்க வங்காள எழுத்தாளர்களின் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க முடிவு செய்து,[1] மகாசுவேதா தேவி, சுனில் கங்கோபாத்யாய், தஸ்லிமா நஸ்ரின், மனோரஞ்சன் பியாபரி போன்றோரின் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.மகாசுவேதா தேவியின் 'ஆபரேஷன் பஷாய் துடு' நாவலின் மொழிபெயர்ப்பிற்காக, அவர் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதை வென்றார்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள்
[தொகு]- Kolkata cafe (in Malayalam). Mathrubhumi books. 2022. ISBN 9789355494085.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of 8 Bengali short stories. - Bashai Tudu (in Malayalam). Mathrubhumi books. ISBN 9788182674295.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of Bengali novel by Mahasweta Devi. - Paschim Dikande Pradosha Kale (in Malayalam). Mathrubhumi books.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of Bengali novel by Vikraman Nair. - Durgashtami (in Malayalam). Sahitya Pravarthaka Cooperative Society. 2021. ISBN 9789391946494.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of 8 Bengali short stories. - Amanushik (in Malayalam). Westland publications limited. ISBN 9789389152531.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of Bengali novel by Manoranjan Byapari. - Chokher Bali (in Malayalam). Current books.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of Bengali novel by Rabindranath Tagore. - Brahmaputhrayude theerath (in Malayalam). Green books. ISBN 9789387331587.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Translation of Bengali novel by Taslima Nasrin.
விருதுகள் மற்றும் பரிசுகள்
[தொகு]- மொழிபெயர்ப்பிறகான 2022 சாகித்ய அகாதமி விருது (ஆபரேஷன் பாஷாய் துடுவின் மலையாள மொழிபெயர்ப்புக்காக [4]
- 2014 கேரள சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது (சோக்கர் பாலியின் மலையாள மொழிபெயர்ப்புக்காக)[5]
- திரிபுனித்துரா முனிசிபல் கவுன்சிலின் ராஜநாகரி விருது (சோக்கர் பாலியின் மலையாள மொழிபெயர்ப்புக்காக)[1]
- சங்கரன் நம்பியார் அறக்கட்டளையின் பேராசிரியர் காளியத் தாமோதரன் நினைவு விருது (ஆபரேஷன் பாஷாய் துடுவின் மலையாள மொழிபெயர்ப்புக்காக)[1]
- ஆபரேஷன் பஷாய் டுடுவின் மொழிபெயர்ப்பும் முதல் இண்டிவுட் மொழிபெயர்ப்பு விருது 2020க்கு பரிந்துரைக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 8 "'ബംഗാളിയില് മലയാള കൃതികള് എത്തുന്നില്ല എന്നതാണ് സങ്കടകരമായ കാര്യം'". Samakalika Malayalam Vaarika (in மலையாளம்). Archived from the original on 22 April 2023. Retrieved 2023-04-22.
- ↑ "Father's Day: 'മൊനേര് മാനുഷി'നെപ്പോലെ ഒരു ഓര്മ്മക്കാറ്റ്". Indian Express Malayalam (in மலையாளம்). Archived from the original on 22 April 2023. Retrieved 2023-04-22.
- 1 2 3 "മലയാളം കൊണ്ട് ബംഗാളിനെ തൊടുന്ന ഒരാളുടെ അനുഭവപ്പകർച്ചകൾ". Mathrubhumi (in மலையாளம்). 2022-06-26. Archived from the original on 22 April 2023. Retrieved 2023-04-22.
- ↑ "Sunil Naliyath wins Akademi award for translation" (in en-IN). The Hindu. 2022-06-25 இம் மூலத்தில் இருந்து 22 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230422060017/https://www.thehindu.com/news/national/kerala/sunil-naliyath-wins-akademi-award-for-translation/article65561492.ece.
- ↑ "2014 ലെ കേരള സാഹിത്യ അക്കാദമി അവാർഡുകൾ പ്രഖ്യാപിച്ചു". ManoramaOnline. Archived from the original on 22 April 2023. Retrieved 2023-04-22.