சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன் என்பவர் தமிழ்நாட்டின், காரைக்குடியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர், நவகாந்தியவாதி ஆவார்.
வாழ்க்கை
[தொகு]இவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் கிராமத்தில் பிறந்து, காரைக்குடியில் வளர்ந்து, சென்னையில் ஆயுர்வேதம் படித்து காரைக்குடிக்கு மீண்டும் திரும்பியவர் ஆவார். அன்னா அசாரே இயக்கம் பரவிய காலகட்டத்தில், அவருக்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை அவருடைய வலைப்பூவில் எழுதிவந்தார். பின்னர் அதிலிருந்து விலகி, 2011இல் ‘காந்தி இன்று’ என்னும் வலைப்பூவை தனது நண்பருடன் இணைந்து துவக்கினார். அதில் காந்தியம் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். இவர் காந்தியம் குறித்து பலர் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்.[1] பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
நூல்கள்
[தொகு]- அம்புப்படுக்கை (சிறுகதைகள்)
- நீலகண்டம் (நாவல்)
- விஷக்கிணறு (சிறுகதைகள்)
- அன்புள்ள புல்புல் (காந்திய கட்டுரைகள்)
- வளரொளி (நேர்காணல்கள்/ விமர்சனங்கள்)
- இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்- க்ஷிதி மோகன் சென் (மொழியாக்கம்)
- சுதந்திரமும் சமூக நீதியும்- ராஜ் மோகன் காந்தி (மொழியாக்கம்)
- பின்நவீனத்துவவாதியின் மனைவி (தொகுப்பாசிரியர். சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகள்)
- கல்மலர் (காந்திய நெடுங்கட்டுரை)
- காந்தி எல்லைகளுக்கு அப்பால் ( மொழியாக்க தொகை நூல்)
விருது
[தொகு]சுனில் கிருஷ்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பான அம்புப் படுக்கை என்ற நூலுக்கு இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது 2018 ஆண்டு வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ம. சுசித்ரா (30 அக்டோபர் 2018). "காந்தி 150: காந்தியின் கேள்விகளைச் சுமக்கும் நவகாந்தியவாதி!". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 31 அக்டோபர் 2018.
- ↑ "சுனில் கிருஷ்ணன், சேதுபதி தேர்வு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு". செய்தி. தினகரன். 23 சூன் 2018. Archived from the original on 2022-10-15. Retrieved 31 அக்டோபர் 2018.