சுனிலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sunila Devi
தனிநபர் தகவல்
பிறப்பு 1 மே 1963 (1963-05-01) (அகவை 58)
ஒளிப்பூர் லகிஷரி, பீகார்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) சஞ்சய் குமார் சிங்

சுனிலா தேவி(sunila devi) (1 மே 1963 - 7 ஜூலை 2017) சமூக ஆர்வலர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். பாட்னாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மக்கள் சங்கம், [1] என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார், இந்த பெண்களுக்கான சிறு குறு தொழில்கள் மூலம் நிதி சேர்ப்பது மற்றும் பெண்கள் அதிகாரம் மற்றும் பொருளாதரத் தன்னிறைவு அடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பீகாரின் நவாடா மாவட்டத்தை மையமாகக் கொண்டு அமைகின்றன.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சுனிலா தேவியின் கணவர் திரு சஞ்சய் குமார் இரண்டு முறை பீகார் ஷெக்ப்புரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும், ஊரக வளர்ச்சியின் மாநில அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார். சுனிலா தேவி தனது கணவருடன் இணைந்து அரசியல் பணியாற்றிவர் ஆவார். [2] சுனிலா தேவி மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ ராஜோ சிங்கின் [3] மருமகளாவார்.

சுனிலா தேவி ஷெய்க்புரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பிப்ரவரி 2005 தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] அக்டோபர் 2005 மறுதேர்தலிலும் சுனிலா தேவி வெற்றி பெற்றார் [6] அடுத்த ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். பீகார் விதான் சபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர் பீகார் சட்டசபையில் மிகவும் வழக்கமான எம்.எல்.ஏ. மேலும் சுனிலா தேவி பீகார் பிரதேச மகிளா காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுள் பணியாற்றினார். [7] [8] தனது சொந்த தொகுதியான ஷெய்க்புராவின் பணிகளில் அதிக கவனம் செலுத்த விரும்பியதால், ஸ்ரீமதி வினிதா விஜய்யிடம் [9] அவர் தனது பொறுப்பை ஒப்படைத்தார். 2009 ஆம் ஆண்டில் நவாவாவிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளராக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். [10]

அவர் 2010 ஆம் ஆண்டில் ஷெய்க்புராவிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜே.டி.யுவின் ஸ்ரீ ரந்தீர் குமார் சோனி [11] என்பவரிடம் தோல்வியடைந்தார். சுனிலா தேவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 7 ஜூலை 2017 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

[12]

 1. PARD http://ngo.india.gov.in/sector_ngolist_ngo.php?page=67&psid=wom&records=200 Retrieved on 11/11/2013
 2. State Minister of Rural Development http://articles.timesofindia.indiatimes.com/2010-10-07/patna/28256563_1_floral-tributes-congress-leaders-sanjay-singh Retrieved on12/11/13
 3. Bihar Assembly Elections 2010 http://biharelection2010.wordpress.com/2010/11/12/sheikhpura-barbigha/
 4. Election Result 2005 http://www.indian-elections.com/assembly-elections/bihar/result-constituencies.html Retrieved on 11/11/2013
 5. Election Result of Sheikhpura Constituency http://www.mapsofindia.com/assemblypolls/bihar/sheikhpura.html Retrieved on 11/11/2013
 6. List of Winning Candidates of Indian National Congress (INC) in Bihar http://www.indian-elections.com/assembly-elections/bihar/partywise-candidate-list3-05.html#inc Retrieved on 11/11/2013
 7. President Bihar Pradesh Mahila Congress http://biharcongressnews.blogspot.in/2010_07_01_archive.html Retrieved on 11/11/2013
 8. All India Mahila Congress State Presidents .http://www.dpcc.co.in/StateMahilaCongressPresident.pdf Retrieved on 02 May 2014
 9. Shrimati Vinita Vijay http://zeenews.india.com/news/bihar/vinita-vijay-new-president-of-bihar-pradesh-mahila-cong_640623.html
 10. INC Candidate of Lok Sabha http://congressmedia.net/articles/newsandmedia/pressreleases/21mar2009-5.rst Retrieved on 11/11/2013
 11. Bihar Assembly Election Results in 2010 http://www.elections.in/bihar/assembly-constituencies/2010-election-results.html Retrieved on 02 May 2014
 12. "पूर्व विधायक सुनीला देवी का निधन, कांग्रेस के महिला प्रकोष्ठ की भी रह चुकी थीं अध्यक्ष– News18 हिंदी".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிலா_தேவி&oldid=3128558" இருந்து மீள்விக்கப்பட்டது